FTC Forum
தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: kanmani on June 25, 2013, 10:46:04 PM
-
4 அணுகுண்டுகள் ஒரு சேர வெடித்தால் உண்டாகும் எப்பத்தின் அளவிற்கு பூமி தற்போது சூடாகி வருவதாக அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளார்கள் விஞ்ஞானிகள். பூமி வெப்பமயமாதல் குறித்து , ஆஸ்திரேலியாவில் உள்ள குவின்ஸ்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானி ஜான்குக் ஆய்வு செய்து வந்தார். அந்த ஆய்வில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பூமியின் வெப்பம் தற்போது அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
கார்பன் டை ஆக்ஸைடு தான் காரணம்...
இந்த அதிக வெப்பத்திற்குக் காரணம் அளவுக்கு அதிகமான கார்பன்- டை-ஆக்சைடு பூமியின் மேற்பரப்பில் படிந்து இருப்பதே எனச் சொல்லப் படுகிறது.
பாதிப்பு...
இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா ஜப்பான் ஹிரோஷிமா நகரம் மீது வீசிய அணுகுண்டு போன்று 4 அணுகுண்டு வீசினால் எவ்வளவு வெப்பம் வெளி வருமோ அந்தளவுக்கு வெப்பம் உயருகிறது என எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.
பூமி தாங்குமா?
இவ்வளவு கொடூரமான வெப்பமானது பூமியை ஒவ்வொரு வினாடியும் தாக்குகிறதாம். இதே நிலை தொடர்ந்தால், சில ஆண்டுகளில் பூமியின் நிலை என்ன ஆகுமென நினைத்துப் பாருங்கள் என திகில் காட்டுகிறார்கள் அவர்கள்.
உருகும் பனிமலைகள்...
அதிலும் குறிப்பாக, பூமியை தாக்குவதில் 90 சதவீத வெப்பம் கடலுக்குள் சென்று விடுகிறதாம். எனவே, இந்த வெப்பத்தினால் பனிமலைகள் மற்றும் விலங்கினங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.