FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on June 22, 2013, 09:01:20 PM

Title: ~ பித்த வெடிப்பு வராமல் தவிர்க்க ~
Post by: MysteRy on June 22, 2013, 09:01:20 PM
பித்த வெடிப்பு வராமல் தவிர்க்க

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.sikams.com%2Fimages%2Farticles%2Fimagesfeet.jpg&hash=c532a05108d4a872664e86230db09890b0ba0368)


காலில் வெடிப்பு ஏற்படுவதல், கால் ஓரத்தில் வெடிப்பு தோன்றுதல், நடக்க இயலாமை, பாதங்களில் வலி போன்றவை இருந்தால், பித்த வெடிப்பாக கருதப்படுகிறது. பெண்கள், இளம் பெண்களுக்கு மட்டும் அல்லாது, ஆண்களுக்கும் பித்த வெடிப்பு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பாதங்களின் அழகு பொலிவு இழந்து விடுகிறது.

செருப்பு அணியாமல் நடப்பது, அதிக ஈரம் உள்ள இடத்தில் வேலை செய்வது போன்ற காரணங்களாலும் பித்த வெடிப்பு ஏற்படலாம். இந்த பாதிப்பு இருந்தால் வெந்நீரில் உப்பு கலந்து பாதத்தை நன்கு தேய்த்து கழுவுவது நல்லது.

பித்த வெடிப்புக்கு கைப்பக்குவ மருந்தாக மருதாணியுடன் ஒரு களிப்பாக்கை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை பாதங்களில் வெடிப்பு உள்ள இடத்தில் பூசி வந்தால் குணம் கிடைக்கும். சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்பட்ட மருந்தும் உள்ளது.

கிளிஞ்சல் மெழுகை தேவையான அளவு எடுத்து அதை ஆமணக்கு எண்ணெயில் கலந்து பாதங்களில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் வெடிப்பு குணமாகி வ kaalathil ருவதுடன் பாத வலியும் குறையும்.