படுத்துகொண்டே பால் குடிக்கும் குழந்தைகளுக்கு காது வலி!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F_yftqiOqCRjo%2FTHnqsvwxTOI%2FAAAAAAAAAIE%2FiCM-hfXv0sI%2Fs320%2Fbaby-2-2.jpg&hash=0e4e61ec882f4ae33b8416ece74d11fd21e3566d)
குழந்தைகளுக்கு வரும் காது வலி :
காது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் . காது மடலை தொட்டால் வலி அதிகமாகும் .
மூக்கை சிந்துவதால் காதின் உள்ளே அழுத்தம் அதிகரிப்பதால் காது வலி அதிகமாகும் . எனவே சிந்தாமல் துடைத்துவிட வேண்டும் .
காதுக்கு பட்ஸ் போடவே கூடாது . அப்படி செய்தால் வெளியே உள்ள அழுக்கு உள்ளே தள்ள படுமே தவிர வெளியே வராது. பஞ்சை கொண்டு விளக்கு திரி போல திரித்து துடைத்து எடுக்க வேண்டும் .
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F_yftqiOqCRjo%2FTHnqtwqxJDI%2FAAAAAAAAAIM%2FTS7GJ8FR8kc%2Fs320%2Fear.jpg&hash=e50ada114d43683771f198b31a20144c87e1daf0)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F_yftqiOqCRjo%2FTHnqu3jJbiI%2FAAAAAAAAAIQ%2F-cBNka8901g%2Fs320%2Fear2.gif&hash=f021f45dbac4546f75b2f2294844aed9d8deca89)
தாய்ப்பால் படுத்து கொண்டு தரக்கூடாது , குழந்தையின் தொண்டைக்கும் நடு காதிற்கும் (middle ear ) உள்ள இணைப்பு(Eustachian tube ) வழியே பால் உள்ளே சென்று சீழ் பிடிக்கும் . அதே போல் புட்டி பால் கொடுத்தாலும் காதில் சீழ் பிடிக்கும் .
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F_yftqiOqCRjo%2FTHnqtRSGQHI%2FAAAAAAAAAII%2Fv1bzSkEbYaU%2Fs320%2Fcomputer_baby.jpg&hash=ab313d6e8f3cbbf7213fdaa680e63e8d0a3eac97)
மூக்கு அடைப்பு இருந்தாலும் காது வலி வரலாம் , எனவே மூக்கு சொட்டு மருந்து போட்டு கொள்ள வேண்டும் .
நன்றி டாக்டர்.ராஜ்மோகன்