-
ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்
பல நேரங்களில் நாம் நமக்குள் இருக்கும் மன உலகத்தை புறக்கணித்து விட்டு வெளி உலகத்தை பற்றியே கவனம் கொண்டு அதை பற்றியே ஆர்வத்துடன் இருக்கிறோம். உண்மையில் நாம் எத்தனை முறை, நம் சுய உலகத்தை அறிந்து கொள்ள முயற்சித்திருப்போம்??
இது வரை நாம் அதனை செய்ய தவறவிட்டாலும், வாழ்வின் அங்கமாய் இருக்கும் சில விஷயங்களை கொண்டு, நம் சுய உலகத்தை அறிந்து கொள்ளலாம். அதுவே ஒரு மனிதனின் தனி தன்மையை வெளிபடுத்தும் சில விஷயங்கள். ஆகவே ஒவ்வொருவரும் அவரது தனித்தன்மையை அடுத்தவரிடம் மறைக்க முடியும் என்று எண்ண வேண்டாம். ஒருவரது ஆளுமையையும், தனித்தன்மையையும் அறிந்து கொள்ள பல வழிகள் உள்ளது. அந்த வழிகளுள் சிலவற்றை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
திரைப்படம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F31-1369990567-1.jpg&hash=51b349d3bc59fdaf8038ad023bae1a4cfb9309ee)
ரசித்து பார்க்கும் திரைப்படங்களை கொண்டும், நாம் எப்பேர்பட்ட நபர் என்று கணித்து விட முடியும். காதல் திரைப்படங்களை அதிகம் பார்க்கும் நபராய் இருப்பின், நிஜ வாழ்க்கையிலும் காதல் வயப்பட்ட நபராய் இருப்பார் மற்றும் வாழ்கையை பற்றிய அணுகுமுறையும் தளர்வாய் இருக்கும். திகில் திரைப்படம் பார்க்கும் நபராய் இருப்பின், அவர் தனிப்பட்ட வாழ்விலும் திகில் அனுபவங்களை விரும்புபவராக இருப்பார். அறிவியல் சார்ந்த திரைப்படங்களை பார்ப்பவர், அறிவாளியாகவும், தன் அறிவு பசியை தீர்த்து கொள்பவராகவும் இருப்பார்.
-
நிறங்கள்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F31-1369990590-2-colors.jpg&hash=74afa022b5f7e1c9eda62f9eeec440b6fa561626)
வண்ண தட்டில் இருந்து பிடித்த வண்ணத்தை தேர்வு செய்ய சொல்லும் போது ஒருவர் சிகப்பு, மஞ்சள் போன்ற பிரகாசமான வண்ணங்களை விரும்புவாராயின், தொலை நோக்குடைய, தோழமையுள்ள நபராய் இருப்பார். இளஞ்சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை போன்ற வண்ணங்களை தேர்வு செய்வாராயின், கூச்ச சுபாவமுள்ள நபராய் இருப்பார்.
-
கைப்பேசி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F31-1369990608-3.jpg&hash=7127239d339b4712b82e1bbab600e02150b58a17)
நாம் அன்றாடம் உபயோகிக்கும் கைப்பேசியை உற்று நோக்குவோம். அது ஸ்டைலாக இருந்தால், நாம் ஃபேஷன் பற்றி அதிகம் விரும்பும் நபர் தான். அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் அடிப்படை வகை கைப்பேசியை வைத்திருந்தால் அவர் சமீபத்திய போக்குகள் பற்றி அக்கறை படாதவராய், தன் போக்கிலே வாழ்க்கையை வாழ்பவராய் இருப்பார். QWERTY விசைப்பலகையுள்ள கைபேசியை உபயோகிப்பவராயின், அவர் தோழமை உள்ளவராய் இருப்பார். மிகையான புகைப்பட கருவி உள்ள கைபேசி வைத்திருப்பவர், இனிமையான தருணங்களை நினைவில் வைத்து ரசிக்கும் நபராய் இருப்பார்.
-
உணவு வகை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F31-1369990622-4.jpg&hash=b2268bec4058459545a8ea21650ff4aa901d17a8)
பிடித்தமான உணவு வகை வைத்தும் ஒருவரை கணிக்க முடியும். மெக்ஸிகன் உணவை விரும்பினால், வரலாற்று இடங்களுக்கு பயணம் செய்து, அவை பற்றி ஆராய்ந்து, எளிய வாழ்க்கை வாழ விரும்பும் நபராக இருப்பார். சீன உணவுகளை விரும்புபவர் எளிதில் ஒத்து போகக் கூடிய நபராய் இருப்பார். கற்பனை மற்றும் கலையில் ஆர்வமுள்ளவர்கள் கேக் போன்ற உணவு வகையை விரும்புவர். ஐஸ்கிரீம் விரும்பும் நபர் குழந்தைத்தனமாக, குற்றமற்றவராய் இருப்பார். முழுமையாக வாழ்கையை விரும்புவார். சமூக மற்றும் தொலைநோக்குடையவர்கள் பிட்சா (pizza) போன்ற உணவை விரும்புவர்.
-
பணியிடத்தில் மேசை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F31-1369990636-5.jpg&hash=7931ab9a754b47c1ff5b21b23c6a8378de9b9c85)
பணிபுரியும் இடத்தில் மேசையை ஒருவர் ஒழுங்குப்படுத்தி வைக்கவில்லையெனில், அவர் அங்கு நீண்ட நாட்கள் பணி செய்யும் எண்ணத்தில் இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம். அதற்கு மாறாக மேசையை சுத்தப்படுத்தி வண்ண தாவரம் மற்றும் புகைப்படங்கள் கொண்டு அலங்கரித்து இருந்தால், அந்த மேசையை தன் சொந்த உடைமையாக கருதுபவராகவும், பணி செய்யும் இடத்தில நீண்ட நாட்கள் ஒட்டிக் கொள்பவராகவும் இருப்பார். குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை வைத்திருப்பவர் என்றால் மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவராய் இருப்பார்.
-
கார்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F31-1369990653-6.jpg&hash=c1132a810d4a2abd978147440e1a4c67da546f4f)
பிடித்த கார் ஒருவரது தனித்தன்மையை எடுத்துரைக்கிறது. பீட்டில் காரை (Beetle Car) விரும்பும் நபர் மென்மையான குணம் உள்ளவராய் இருப்பார். பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை (BMW 7 series) விரும்புபவர், சிரத்தையுள்ள கவனிக்கக்கூடிய நபராய் இருப்பார். ஹைபிரிட் (Hybrid) வைத்திருப்பவர், நுட்பமான அறிவு சார்ந்த நபராய் இருப்பார். கியா சோல் (Kia soul) தீர செயல்மிக்க சாகசக்காரரை குறிக்கிறது. ஸ்மார்ட் ஃபார் டூ (Smart For Two) காதல் மன்னர்களைக் குறிக்கும்
-
காலணி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F31-1369990679-7.jpg&hash=20c061ea5d2d7f33644566b735a5f4a01e757362)
ஒருவரது காலணி கூட அவரை பற்றி குறிப்பு கொடுக்கும். ஸ்னீக்கர்ஸ் (Sneakers) பொதுவாக சுறுசுறுப்பான, துடிப்பானவர்களை குறிக்கும். பாலெட் ஷூ (Ballet Shoes) மென்மையானவர்களை குறிக்கும். ஸ்டிலெட்டோஸ் (Stilettos) அழகானவர்களை குறிக்கும். சாதாரண காலணிகள் அனைவருடன் எளிதில் ஒத்து போகக்கூடியவர்களை குறிக்கும்.
-
விலங்கு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F31-1369990699-8-dog.jpg&hash=8510a0e865e6617e11fad592674e455aa54a0f64)
பொதுவாக பறவைகளை விரும்புபவர்கள் பார்வையாளராகவும், கனவு காண்பவராகவும் இருப்பர். உள்முகச் சிந்தனையாளர், அனைவருடனும் ஒத்து போக கூடியவராகவும் இருப்பவர்கள், மீன்களை பிடித்த விலங்கினமாக கொள்வர். சுமூகமான குண நலன் உடையவர் நாயையும், சோம்பேறி மற்றும் சுயநலவாதிகள் பூனைகளையும் விரும்புவர். ஆளுமை திறன் உடையவர்கள் மற்றும் ஆதிக்க சக்தியை விரும்புபவர்கள் சிங்கத்தையும், அடங்கி போகும் குணமுடையவர் எலியையும் விரும்புவர். அதிலும் எலியை விரும்புபவர்கள் சுயமாக வாழ்க்கையை வாழ தெரியாதவராய் இருப்பர் .