FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on June 22, 2013, 09:26:52 AM
-
தனியா - கால் கப்
ஏலக்காய் - 2 தேக்கரண்டி
கருப்பு ஏலக்காய் - 3
மிளகு - 2 தேக்கரண்டி
கிராம்பு - 2 தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
அன்னாசிப்பூ - 4
ஒரு இன்ச் அளவில் பட்டை - 4
ஜாதிக்காய் - பாதி (அ) ஜாதிக்காய் பொடி - ஒரு தேக்கரண்டி
பிரியாணி இலை - 2
சிகப்பு மிளகாய் - 4 (காரத்திற்கேற்ப)
சீரகம் - 2 தேக்கரண்டி
ஜாதிபத்திரி - ஒன்று
பொடியாக நறுக்கிய காய்ந்த பூண்டு - ஒரு தேக்கரண்டி
சுக்கு - சிறிது (அ) சுக்குப்பொடி - ஒரு தேக்கரண்டி
தேவையானவற்றை அளந்து எடுத்துக் கொள்ளவும். கருப்பு ஏலக்காய், சுக்கு, ஜாதிக்காயை நசுக்கி வைக்கவும்.
ஒவ்வொன்றாக சிறுதீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
நன்றாக சூடு போக ஆற வைக்கவும்.
ஆறியதும் விரும்பிய பதத்தில் அரைக்கவும்.
மணமான கரம் மசாலா பொடி தயார்.