FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on June 22, 2013, 09:15:27 AM
-
லெமன்கிராஸ்(lemongrass) இருமல், சளி, காய்ச்சல் ஆகியவற்றை சமாளிக்க உதவியாக இருக்கிறது. இதுமட்டுமன்றி பல வழிகளில் நமது ஆரோக்கியத்திற்கு உதவி புரிகிறது. மருத்துவரிடம் சென்றால் சளி, இருமல் என அனைத்திற்கும் மருந்துகளை தருகின்றனர். அதுவே நாம் வீட்டு வைத்திய மருந்தில் குணமாகும் என்றால் அதை பயன்படுத்துவது நல்லது தானே..
மருந்து மாத்திரைகளை விட வீட்டு வைத்தியம் சளி, இருமல், குளிர் காய்ச்சல் போன்றவற்றிற்கு சிறந்தது. லெமன்கிராஸ் டீ பருகுவதால் இருமல், குளிர் காய்ச்சல் இருப்பின் அவற்றை குணப்படுத்துகிறது. இந்த லெமன்கிராஸ் மருத்துவத்தில் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது என்னென்ன சுகாதார நலன்களை கொண்டுள்ளது என பார்ப்போம். காய்ச்சல், இருமல் மற்றும் சளியை சமாளிக்க உதவுகிறது. நீண்ட நாட்கள் மன அழுத்தத்தில் அவதி படுபவர்களுக்கு லெமன்கிராஸ் உதவுகிறது. உயர் இரத்த அழுத்தத்துடன் இணைந்து செயல்படுகிறது.
நச்சு பொருட்களை அகற்றி உடலை தூய்மையாக்கி கொழுப்பின் அளவை குறைப்பதற்காகவும் பயன்படுகிறது. சிறுநீரகம், கணையம், கல்லீரல், சிறுநீர்ப்பை போன்ற அனைத்து உறுப்புகளையும் தூய்மையாக வைத்துக்கொள்ள பயன்படுகிறது. செரிமான அமைப்பில் பிரச்சனைகள் ஏற்படாமல் செரிமான அமைப்பை மேம்படுத்தி இரத்த ஒட்டத்தை சீரமைக்கிறது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை சமாளிக்க உதவுகிறது. மேலும் மாதவிடாய் கோளாறால் அவதிப்படும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்கிறது. முகப்பரு தொல்லையால் அவதிபடுபவர்கள் இதை முகத்திற்கு பயன்படுத்தினால் முகப்பரு தொல்லையிலிருந்து விடுபடலாம்.
எப்படி பயன்படுத்தலாம் லெமன்கிராஸை
லெமன்கிராஸை பல வழிகளில் பயன்படுத்தலாம். அதிக மக்கள் லெமன்கிராசின் சுவையை உணவில் சேர்த்துக்கொள்வதற்காக அதனை எண்ணெய்யாக பயன்படுத்துகின்றனர். இதனை சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து சர்க்கரை, தேயிலை, இஞ்சி சேர்த்து தேநீர் மாதிரியும் பருகலாம். லெமன்கிராஸை மருத்துவ பானமாகவும் தயாரிக்கலாம். புதியலெமன்கிராஸ் இலை இரண்டு மூன்று கிராம்பு, சிறிய துண்டு இலவங்கப்பட்டை, மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர் இந்த கலவையில் சேர்த்ததை வடித்து விட்டு குடித்தால் காய்ச்சல், இருமல், சளி ஆகியவை குணமடையும். இதில் ஆண்டிபாக்டீரியா மற்றும் காலானின் பண்புகளை கொண்டிருக்கிறது.