FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on June 21, 2013, 08:51:48 PM

Title: ~ மஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும் ~
Post by: MysteRy on June 21, 2013, 08:51:48 PM
மஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-b.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F1017458_514260231973239_357634199_n.jpg&hash=e0ee8597e25cb2dd22fb2a06f6790681bdb50f77)




*`இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்’ -இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள்.

*விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

*இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான்.

*பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.

*மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமலாவது, சளியாவது, போயே போயிடும்.


தேவையான பொருட்கள்...

பால் -1 கப்
மிளகு - 10
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
சுகர் லைட் (அ) பனங்கற்கண்டு - 1 ஸ்பூன்

செய்முறை....

மிளகை பொடித்துக் கொள்ளவும்.
பாலை காய்ச்சி கொள்ளவும்.
காய்ச்சிய பாலில் (பால் சூடாக இருக்க வேண்டும்) பொடித்த மிளகு, மஞ்சள் தூள், சுகர் லைட் (அ) பனங்கற்கண்டு போட்டு நன்கு கலந்து பருகவும்.

இந்த பாலை சூடாக குடித்தால் நன்றாக இருக்கம்.

இந்த மிளகு பால் தொண்டை வலி, சளி போன்ற பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது.