FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on June 21, 2013, 08:43:36 PM

Title: ~ ஆஸ்துமாவை விரட்டும் வெல்லம்...! ~
Post by: MysteRy on June 21, 2013, 08:43:36 PM
ஆஸ்துமாவை விரட்டும் வெல்லம்...!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-b.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F1012623_469658549775761_254285195_n.jpg&hash=362ced1f7aebafd9dd5b88f16040c43d7dbf74e7)


ரத்த சோகைக்கு தீர்வு நம் வீட்டு சமையல் அறையிலேயே இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது. தவிர இதிலுள்ள சத்துக்கள் பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மற்றும் ஜின்க் ஆகும். வெல்லத்தில் மினரல்ஸும் அதிகம் இருப்பதால் சத்துணவாக இது அமைந்துள்ளது. இதில் மேக்னிஷியம் இருப்பதால் நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்தும், தசைகளை ரிலாக்ஸ் செய்யும்.

எலுமிச்சைச் சாறு பிழிந்து அதில் வெல்லத்தை தட்டிப் போட்டு பருகினால் உடனடியாக சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி அடையும். பொதுவாக அஸ்கா சர்க்கரை உட்கொள்ளும்போது அதிலுள்ள சத்துப் பொருட்கள் உடனடியாக உடலில் சேர்ந்துவிடும். ஆனால் வெல்லம் சத்துக்களை உடலில் தேக்கி வைத்து தேவைப்ப்டும் போது தகுந்த பயனை அளிக்கும்.

சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள்.
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும், காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு தலைசுற்றலும் இருக்கும் அந்நிலையில் வெல்லம் சாப்பிட சரியாகிவிடும்.
ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம். வெல்லம் ஒரு ஆன்டி அலர்ஜிக் என்று பலருக்கும் தெரியாது.