FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on June 21, 2013, 08:38:21 PM

Title: ~ உலர்ந்த பழங்களில் உள்ள மருத்துவக் குணங்கள்! ~
Post by: MysteRy on June 21, 2013, 08:38:21 PM
உலர்ந்த பழங்களில் உள்ள மருத்துவக் குணங்கள்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-g.ak.fbcdn.net%2Fhphotos-ak-frc3%2Fq71%2F430092_522777714438894_62496662_n.jpg&hash=1bb927584269eef2b88a524ba86f92422063353b)


அன்றாடம் உட்கொள்ளும் உலர்ந்த பழங்களில் இருக்கின்ற உயரிய மருத்துவ குணங்கள் எவையென நாம் பார்ப்போம்.

* அத்திப்பழம் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிகம் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.

* உலர்ந்த ப்ளம்ஸை, மல்டி-வைட்டமின் மாத்திரை என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவில் அதில் வைட்டமின்கள் உள்ளது மேலும் இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது.

* பெர்ரிப் பழங்களில் ஒன்றான ப்ளூபெர்ரியிலும், உலர்ந்து இருக்கிறது. இந்த உலர் ப்ளூபெர்ரியில் வைட்டமின் சி, பி மற்றும் ஏ அதிக அளவில் நிறைந்துள்ளது. இது மைய நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத சத்துக்கள் உள்ளடக்கியது.

* கோடையில் மட்டும் கிடைக்கும் மாம்பழத்தை வருடம் முழுவதும் சாப்பிடுவதற்கு தான் உலர் மாம்பழங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த உலர் மாம்பழங்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்றவை உள்ளன. அதுமட்டுமின்றி இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் அதிகம் உள்ளன.

* ஆப்ரிக்காட் இதிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அதவும் இது டயட்டில் இருப்போருக்கு மிகவும் சிறந்த ஸ்நாக்ஸ்.

* உலர்ந்த செர்ரி பழத்திலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இது டெசர்ட் உணவுகளில் டாப்பிங்கிற்கு ஏற்றதும் கூட.

* கிரான்பெர்ரியில் (Cranberry) நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும். அதேப் போன்று உலர்ந்த கிரான்பெர்ரியை அதிகம் சாப்பிட்டாலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிலும் சிறுநீர் தொற்று அல்லது இருமல் மற்றும் சளி இருப்பவர்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.