FTC Forum

Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: kanmani on June 20, 2013, 10:34:00 AM

Title: ஆலயத்தில் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன?
Post by: kanmani on June 20, 2013, 10:34:00 AM
கோயிலில் இருக்கும் மரங்களிலிருந்து இலைகளையோ, பூக்களையோ வீட்டு வழிபாட்டிற்கோ, ஆத்மார்த்த பூஜைக்கோ பயன்படுத்தக் கூடாது. சுவாமிகளுக்கு

அபிஷேகம், நிவேதனம் நடக் கும்போது வீழ்ந்து வணங்கக் கூடாது.

பிறருடைய அன்னத்தைப் புசித்த தினத்தில் ஆலயத்தில் வந்து சேவிப்பது, முதல் அபச்சாரம். பிறர் பொருளைக் கொண்டு சுவாமிக்கு நிவேதனம்  செய்யக் கூடாது.

வீட்டில் செய்துவரும் நித்திய பூஜையை நிறுத்திவிட்டு ஆலயம் செல்லலாகாது.

ஒருவரைக் கெடுப்பதற்காகக் கோயிலுக்குச் செல்வதோ, அர்ச்சனை, அபிஷேகம் நடத்துவதோ அபச்சாரமாகும்.

கறுப்பு ஆடை அணிந்து கொண்டு பூஜை செய்வதும் கோயிலுக்குச் செல்வதும் கூடாது.

ஆண்கள் சிவப்பான ஆடையை அணிந்து செல்லலாகாது. பெண்களுக்கு சிவப்பு சிறந்தது.

பூஜை செய்யும்பொழுது பிறருடன் பேசுவது தவறு.

இருட்டில் பகவானை வணங்குதல் ஆகாது. இருட்டில் பூஜை செய்யவும் கூடாது.

குளிக்காமலோ, கால் கழுவாமலோ, பாதுகையுடனோ ஆலயம் செல்வது குற்றம்.

ஏதேனும் பழம், தேங்காய், புஷ்பம் முதலியவை இல்லாமல் கோயிலுக்குச் செல்லக் கூடாது.

சாஸ்திரம் கூறாத இடத்தில் நமஸ்காரம் செய்தால் மற்ற மூர்த்திகளுக்கு எதிரில் காலை நீட்டிய குற்றம் உண்டாகும்.

கோபத்துடன் ஆலயம் செல்வது கூடாது.

முறைப்படி ஸ்நானம் செய்யாமலோ, முறைப்படி வஸ்திரம் அணியாமலோ, நெற்றிக்கு அணியாமலோ செல்வது குற்றமாகும்.

பொதுவாகவே வீட்டில் புசித்து விட்டு அதன் பிறகு ஆலயம் போகலாகாது.


ஆலயங்களில் செய்யக் கூடாதவை எவை?



1. ஒரு பிரதட்சணம், ஒரு நமஸ்காரம்.

2. உடம்பைப் போர்த்திக்கொண்டு பிரதட்சணம், சமஸ்காரம் செய்தல். (பெண்கள் இதற்கு விதிவிலக்கு)

3. தனித்தனியாக ஒவ்வொரு தெய்வத்தையும் நமஸ்கரித்தல்.

4. பிரசாதத்தைத் தவிர வேறு உணவு வகைகளை கோவிலுக்குள் சாப்பிடக்கூடாது.

5. வீட்டு விலக்கு, சாவுத்தீட்டு போன்ற அசுத்த நிலையில் செல்லக்கூடாது.

6. கண்டகண்ட இடத்தில் கற்பூரம் ஏற்றக் கூடாது. விக்கிரங்களைத் தொட்டு வணங்கவே கூடாது.

7. கர்ப்ப கிரகத்தினுள் நமஸ்காரம் செய்யக்கூடாது.

8. கொடி மரம், நந்தி, பலி பீடம் இவைகளுக்கு குறுக்காகச் சென்று பிரதட்சணம் செய்யக்கூடாது.

9. தெற்கு முகமாக நமஸ்காரம் செய்யக்கூடாது.

10. தலைக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டோ, ஈரஆடையுடன் கூடவோ தெய்வ வழிபாடு செய்யக்கூடாது.

11. ஆலயத்தினுள், படுத்து உறங்குதல், அரட்டை அடித்தல், உரக்க சிரித்தல், அழுதல், தாம்பூலம் தரித்தல் போன்ற காரியங்களைச் செய்யக்கூடாது.

12. பொய் பேசுதல், மற்றவர்களை நிந்தித்தல், பெண்களிடம் தகாத முறையில் நடத்தல் போன்றவை கூடாது.

13. ஆலயத்தினுள் மனிதர்கள் யாருக்குமே நமஸ்காரம் செய்யக் கூடாது. ஆலயம், இறைவனுடைய இல்லம். இங்கு செய்யப்படும் மரியாதைகள் அனைத்தும் அவனுக்கு மட்டுமே உரியன.

14. ஆலயத்தின் உள்ளும், புறமும், மல ஜலம் மற்றும் சிறுநீர் கழிப்பது மகா பாவம்.

15. காலணிகள், தோல் பை மற்றும் மிருகத் தோலாலான எந்த பொருளுடனும் ஆலயத்தினுள் நுழையக் கூடாது.

16. கோவில் மூடிய நிலையில் இருக்கும் போதும் சுவாமி வீதியில் உலா வரும் போதும் கோவிலினுள் சென்று தரிசனம் செய்ய முயற்சிக்கக்கூடாது.