FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on June 19, 2013, 10:52:16 PM
-
என்னென்ன தேவை?
பிரெட் ஸ்லைஸ் - 4,
பால் - 3 கப்,
சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்,
பச்சை ஏலக்காய் - 6,
பால் பவுடர் - 4 டேபிள்ஸ்பூன்,
கெட்டியான கிரீம் - 2 டேபிள்ஸ்பூன், குங்குமப் பூ - சிறிது,
நெய் - 4 டேபிள்ஸ்பூன்.
அலங்கரிக்க...
சில்வர் ஃபாயில் பாதாம் - 5,
பிஸ்தா - 5,
முந்திரி- 8
எப்படிச் செய்வது?
பிரெட் ஸ்லைஸ்களின் ஓரங்களை நீக்கவும். ஒவ்வொரு ஸ்லைசையும் 3 துண்டுகளாக, விரல் நீளத்துக்கு வெட்டவும். சிறிது நெய்யில் பிரெட் துண்டுகளை பொன்னிறத்துக்கு வறுத்துத் தனியே வைக்கவும். பாலில் சர்க்கரையும் நசுக்கிய ஏலக்காயும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி, சூடாக இருக்கும் போதே, நான்கைந்து பிரெட் துண்டுகளை அதில் சில நொடிகளுக்கு ஊற வைத்து, பிறகு ஒரு சமமான தட்டில் அடுக்கி வைக்கவும். மொத்த பிரெட் துண்டுகளையும் இதே மாதிரிச் செய்து, தட்டில் அடுக்கவும்.
ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்க வேண்டாம். சிறிது பாலில், பால் பவுடரை கரைத்து பேஸ்ட் போலச் செய்யவும். மீதி பாலை மறுபடி அடுப்பில் வைத்துக் கொதிக்க வைக்கவும். அதில் சிறிது பாலில் கரைத்த குங்குமப் பூவையும், பால் பவுடர் பேஸ்ட்டையும் சேர்க்கவும். 15 முதல் 20 நிமிடங்களுக்கு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். அடுப்பிலிருந்து இறக்கி, அதில் கிரீம் சேர்க்கவும். இந்தக் கலவையை இப்போது, அடுக்கி வைத்துள்ள பிரெட் துண்டுகளின் மேல் ஊற்றவும். சில்வர் ஃபாயிலால் அலங்கரித்து, குங்குமப் பூ தூவவும். பொடியாக சீவிய பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரியால் மேலும் அலங்கரித்து, சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறவும்.