FTC Forum
Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: ஸ்ருதி on October 28, 2011, 06:39:53 AM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fseasonsnidur.files.wordpress.com%2F2010%2F06%2Fshowletter.jpg%3Fw%3D300%26amp%3Bh%3D185&hash=addf90d07bf1ed36281b84a9a3a36f689529d608)
ஒரு பறவை வானில் பறக்க வேண்டுமானால் அதற்கு இரண்டு இறக்கைகள் வேண்டும். அதுபோல இறைவழிபாட்டிற்கு அன்பும், ஆச்சாரமும் வேண்டும். அன்பில்லாத ஒழுக்கமோ அல்லது ஒழுக்கமில்லாத அன்போ பயனற்றதாகும்.
கண்ணால் காணமுடியாததால் இறைவன் இல்லை என்று கூறக்கூடாது. இந்த உடம்பிலேயுள்ள உயிரை நாம் எப்போதாவது கண்ணால் கண்டதுண்டா? உயிரைப் பார்க்க முடியாததால் நாங்கள் உயிரில்லாதவர்கள் என்று கூறினால் உலகம் சிரிக்குமல்லவா? உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் இறைவனும் உறைந்திருக்கின்றன. எல்லா உயிர்களுக்கும் நாம் நன்மையே செய்ய வேண்டும். உயிர்களுக்குச் செய்யும் நன்மை இறைவனுக்குச் செய்யும் நன்மையாகும்.
* வயலில் தூவப்படும் சில விதைகளே, பல ஆயிரம் மடங்காக பயிர்களை திருப்பித்தரும். அதைப்போலவே ஒருவர் செய்யும் நன்மையும், தீமையும் பல மடங்காக பெருகி அவரிடமே வந்து சேரும். ஆகவே, எப்போதும் நன்மை செய்பவர்களாகவே இருங்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக இல்லாவிட்டாலும்கூட, நன்மை செய்வதிலிருந்து தவறாதீர்கள். இவ்வாறு செயல்படுபவர்களுக்கே விரைவில் இறைவன் அருள் கிடைக்கும்.
-
Migavum nalla thagaval shruthioo...! iraivan illai yenru solbavargal padam perattum.!
-
nalla pathivu ;)
-
nandrigal
-
"சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக இல்லாவிட்டாலும்கூட, நன்மை செய்வதிலிருந்து தவறாதீர்கள்"
நல்ல கருத்தை சொல்லிருகிறீர்கள் இந்த பதிவிலே.நன்றி ஸ்ருதி.
-
அன்பில்லாத ஒழுக்கமோ அல்லது ஒழுக்கமில்லாத அன்போ பயனற்றதாகும்.
Arthamulla varigal. Nalla pathivu.