FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: Gayathri on June 04, 2013, 09:23:04 PM

Title: Facebook இன் புதிய வசதி
Post by: Gayathri on June 04, 2013, 09:23:04 PM
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஓர் உதாரணம் Facebook என்றுகூட கூறலாம். தனது தோற்றத்திலும், வசதிகளிலும் அடிக்கடி மேம்படுத்தல்களை மேற்கொள்ளும் Facebook மேலும் ஒரு புதிய வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் Facebook Status மூலமாக கருத்துக்கள், காணொளிகள், புகைப்படங்கள், இடங்கள் போன்ற வற்றை பகிர்ந்து கொள்ள முடிந்தது. என்றாலும் தற்போது இவற்றுடன் சேர்த்து தமது உணர்வுகள், நிலைமைகள் போன்றவற்றை துல்லியமாக வெளிக்காட்டும் வகையில் பல்வேறு புதிய அம்சங்களை Status பகுதியில் புகுத்தியுள்ளது.

அதாவது இதன் மூலம் நீங்கள் தற்போது இருக்கும் நிலைமையை நண்பர்களுக்கு அறியப்படுத்த ஒவ்வொரு உணர்வுகளுக்குமான Emoticons கள், நீங்கள் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்சிகள், நீங்கள் வாசிக்கும் புத்தகங்கள், நீங்கள் கேட்கும் பாடல்கள், நீங்கள் அருந்தும் பானங்கள், நீங்கள் சுவைக்கும் உணவுகள் என அத்தனையையும் அழகிய முறையில் Status Update ஆக இடும் வசதியே இதுவாகும்.

நீங்களும் இதனூடாக உங்களின் ஒரு நிலைமையை வெளிப்படுத்த வேண்டுமெனின் Facebook Status பகுதியில் Cursor ஐ வைத்து பின் Status Bar இன் கீழ் பகுதியை பாருங்கள் அங்கு புதிதாக ஒரு Emoticon ஒன்றை அவதானிக்கலாம். அதில் சுட்டுன்போது உங்கள் நிலைமைகளை புதிய முறையில் வெளிப் படுத்துவதற்கான வசதியை அவதானிக்கலாம்.

இனி தொடங்குங்கள் உங்கள் கைவரிசையினை.......


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1287.photobucket.com%2Falbums%2Fa621%2FMyTranquilize%2FImages%2F983930_zps244ac82b.png&hash=8f74013311afa5cd827dbf970ca255f8103e05e8)