FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on October 23, 2011, 10:49:09 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F_Jeq2DwJHcCc%2FRnVNfx3XMJI%2FAAAAAAAAAEQ%2FKGxo8PJHvcc%2Fs320%2Frajini_fan_poja.jpg&hash=1df33c30de4e8e3b0468cce457bc6e2b27775951)
வெண்திரை..
சிலர் கனவுகளை
நனைவாக்கி
பலர்கனவுகளை
நிர்மூலம் ஆக்கும்
கனவு தொழிற்சாலை..
கோடிகளுக்கு
மதிப்பில்லாமல்
ஆடம்பரங்களை
அனாயசகமாக
கண்முன்
காட்டும் மாய உலகம்..
அழகு இருந்தால் வாய்ப்பு..
முந்திய வரலாறு
அதிர்ஷ்டம் இருந்தால்
அழகில்லதவனும்
ஆட தெரியாதவனும்
கதாநாயகன் தான்
புது வரலாறு..
தமிழ் பேசும் நாயகிகளுக்கு
ஆயுள் குறைவு..
பிறமொழிநாயகிகளுக்கு
தமிழும் குறைவு
ஆடையும் குறைவு
தயாரிபாளர்களுக்கு...
மூன்று நேர
கேளிக்கையில் மூழ்கி
வாழ்வை துலைக்கும்
இளைஞர் கூட்டம்..
இளைஞர்களே
கதாநாயகன் பின்
அலையாதே..
உன்னை அலையவிட்டு
குளுகுளு காரில்
கை அசைத்து
வலம் வரும்
நாயகன் அவன்...
அறியமாட்டான்
உன் நிலை...
சொந்த செலவில்
பால் வாங்கி
பல அடி உயரத்தில்
தலைவனுக்கு
பால் அபிஷேகம்
தேவை தானா??
கொஞ்சம் நிலை தவறி
நீ விழுந்தால்
உனக்கு தான் பால்.. ??? ???
-
// கொஞ்சம் நிலை தவறி
நீ விழுந்தால்
உனக்கு தான் பால்.. ??? ??? //
ha ha very nice
-
yathaarththam nalla kvithai shuru ;)
-
thankss remo and rose