FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on May 18, 2013, 08:43:36 PM

Title: ~ காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு போறீங்களா? இதப்படிச்சிட்டு போங்க ~
Post by: MysteRy on May 18, 2013, 08:43:36 PM
காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு போறீங்களா? இதப்படிச்சிட்டு போங்க

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F_KbM0IsIH4ZU%2FS77aWFXcAAI%2FAAAAAAAAAzE%2Fm26Pmsu1eXA%2Fs1600%2Fvege2.jpg&hash=e11dda65e6b6b8974321cdf572f3e580f2a04328)


முருங்கைக்காய் மேலிருந்து கீழ்வரை ஒரே சீராக இருக்க வேண்டும்
வெண்டக்காய் மற்றும் அவரை காயில் விதைகள் புடைத்து வெளியே தெரிந்தால், அது முற்றல்
கீரை மஞ்சள் பூத்திருந்தால் அருகில் கூட செல்லாதீர்கள்
அரைக்கீரை, முளைக்கீரையில் தண்டுகள் பெருத்திருந்தால் சுவையாக இருக்காது

வெண்மையாகவும் அழுத்தமாகவும் இருந்தால் மட்டுமே காலிப்ளவரை வாஙகலாம். பூத்து விரிந்திருந்தால் சுவை கிடையாது
நூல்கோல், முள்ளங்கி, சுரைக்காய், சவ்சவ், பீர்க்கங்காய் போன்றவைகளை கையால் அழுத்தும்போது அழுந்தினால் நல்லது.

ஆனால் வெங்காயம், வாழைக்காய்,மாங்காய் அழுந்தினால் வேண்டாம்
அழுத்தமான ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் மட்டும் அது நல்ல கருணைக்கிழங்கு என்று அர்த்தம். சுவையோ சூப்பர்

பாதி பழுத்த தக்காளிதான் சுவையாக இருக்கும்
வாழைத்தண்டை கிள்ளிப்பாருங்கள். நார் தெரிந்தால் அது முற்றல்
நன்றி தமிழ்மணம்