FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on October 23, 2011, 05:56:57 PM
-
உன்னை சந்தித்தநொடியில்
என் சுவாசத்தில்
சிறு மாற்றம்...
சிக்கி தவிக்கிறது
என் உயிர் மூச்சு..
நீ இருக்கும் வரை தான்
என் இறுதி ஆயுளும்
நீளும் என் உயிரே
என்னை உன் அன்பால்
வசப்படுத்தினாய்
இன்று அந்த அன்பு
ஏனோ நிலைக்கவில்லை
சிறு சந்திப்பில் மகிழ்ச்சி
சிறு புன்னகையில் ஒர்ராயிரம் கனவுகள்
சிறு கோவத்தில் நம் சண்டைகள்
சிறு எதிர்பார்ப்பில் பல தோல்விகள்
சிறு ஊடலில் நம் தாபங்கள்
எல்லாமே உன்னால் நான்
ரசித்தவை..
ஆனால்,,,,
சிறிய பிரிவு கூட
நம்மிடத்தில் வேண்டாம்
என் உயிரே..
உன் பிரிவை தாங்காமல்
என் உயிரும்
சிறிதாகி தொலைந்து போகுமே.......
-
// என்னை உன் அன்பால்
வசப்படுத்தினாய்
இன்று அந்த அன்பு
ஏனோ நிலைக்கவில்லை//
feeling super
-
thanks remo :)