FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Yousuf on October 23, 2011, 02:38:25 PM
-
தூக்கு தண்டனைக்கு எதிராக பலத்த வாதங்கள் படித்தவர் மத்தியில் எழுகிறது. பெருகி வரும் குற்றச் செயல்கள் காந்திய சிந்தனைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. அகிம்சை, தூக்கு, சகிப்பு, மன்னிப்பு, ஆயுள் தண்டனை, காவல் நீடிப்பு, முன் ஜாமீன், பலவீன சாட்சி, பல்டியடித்த சாட்சி சொற்றொடர்கள் மீண்டும் புதிய அர்த்தம் பெற வேண்டும்.
சிறுமியை கற்பழித்துக் கொலை, கடத்தல் கொலை, கலவரக் கொலை, ஊர்மக்கள் மத்தியில் ஓட ஓட விரட்டிக் கொலை உயிர் பறிப்பு காட்சிகள் புதிய வழக்குகளின்¢ எண்ணிக்கையை மட்டும் உயர்த்துகின்றன. வழக்கறிஞர்களுக்கு நல்ல வசூல் வேட்டை. இதழ்கள், தனியார் ஊடகங்களுக்கு அதிக விளம்பர வரவு. உலகில் மிகப்பெரிய அரசியல் சட்டம்.
மூன்று ஆண்டுகள் சட்ட மாமேதை இரவு பகல் உழைத்து உருவாக்கியது. 100 ஓட்டைகள் சட்டத்திருத்தம் போர்வையில் ஆட்சியாளர்களின் ஆசைகள் அரங்கேற்றம். புதிய புதிய சட்டங்கள். நடைமுறைப்படுத்த ஒருவருக்கும் துணிவில்லை.
தலைநகர் சென்ட்ரல், அண்ணா சாலை மத்தியில் மக்கள் நடமாட்ட பகுதியில் பகிரங்க தூக்கு மேடை தேவைப்படுகிறது. ஆறுகோடி தமிழர்களின் அமைதி வாழ்வை ஆறாயிரம் குற்றவாளிகள் பறிக்கின்றனர். பணம் பெற்று கூலிக்கு கொலை செய்யும் கும்பல் கொழுத்து வளர்கிறது. நாகரீக சமுதாயம் வேடிக்கை பார்க்கிறது. நீதிமன்றம், அரசியல்வாதி, சட்டமன்றம், ஊடகம், காவல்துறை ஒவ்வொரு பிரிவும் அடுத்தவர் தலையில் பழியைப் போடுகின்றனர்.
மனித உயிரை இறைவன் படைத்தான். உயிர் பறிக்கும் அதிகாரம் மனிதனுக்கில்லை. மனிதரின் உயிரை பகிரங்கமாக வெட்டிச்சாய்க்கும் கொடூரவாதியை உயிருடன் நிம்மதியாக வாழ அனுமதிக்கக்கூடாது.
மனித உரிமை காரியவாதிகள் பத்தாம்பசலித்தனமாக, சிறுபிள்ளைத்தனமாக கூச்சலிடுகின்றனர். தூக்குதண்டனை நடைமுறை செயல்படவேண்டும். இனிவேறு வழியில்லை. யார் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம். சாட்சிகளை பலவீனப்படுத்தினால் போதும். நீதிமன்றச் செலவுகளை, ஸ்டேஷன் கவனிப்புகளை சமாளித்தால் போதும். எளிதில், சில வாரங்களில் அரவமின்றி காலரை தூக்கிவிட்டுக் கொண்டு, நிம்மதியாக நெஞ்சை நிமிர்த்தலாம்.
இன்றைய லஞ்ச, ஊழல் சூழ்நிலை மேன்மேலும் கொடூர குற்றவாளிக்கு சாதகமாக திகழ்கிறது. கொலையாளிகள் உடன் சில நாட்களில் தண்டிக்கப்பட வேண்டும். அமைதி விரும்பும் சராசரி மனிதர்களை காப்பாற்ற தூக்கு மேடை பயன்படும்.
நகரில் ஒரு சிலர் எளிதாக கொலை செய்து தப்பிப்பது, சமுதாயத்தின் இன்னொரு பக்கத்தில் கோழைகளை உருவாக்கும். வெறித்தன கொலைக்கு தூக்கு மட்டுமே சரியான பரிசு. மாதக்கணக்கில் வழக்கை நீடிப்பது, வாய்தா, சாட்சி பிதற்றல் தேவையேயில்லை. பொதுமக்கள் மத்தியில் வாரந்தோறும் பகிரங்கமாக நகரில் கொலையாளிகளை தூக்கிலிட, துடிதுடிக்கச் சாகடிக்க வேண்டும். தீயவர்களை கொல்வது எல்லா காலங்களிலும் நடைமுறைச் சித்தாந்தம்.
தமிழ்நாடு குற்றவியல் பட்டியல் :
கொலை :
2006 - 1273,
2007 - 1521,
2008 - 1630,
2009 - 1644
சொத்துக்காக, பணத்துக்காக கொலை :
2004 - 74,
2008 - 105,
2009 - 123
கொள்ளை :
2008 - 662,
2009 - 1144
வழிப்பறி :
2005 - 437,
2008 - 3849,
2009 - 4221
கற்பழிப்பு :
2007 - 523,
2008 - 573,
2009 - 596
இது மூன்று ஆண்டுகளுக்கு முன் உள்ள பட்டியல். தற்போது பட்டியல் இதைவிட குற்றங்கள் நீளுகிறது என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை.
-
:( :( :( hmmm poohura pookku sarillaaa :(
-
Yenna Sari illai ::)