FTC Forum
தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: kanmani on May 09, 2013, 09:37:52 AM
-
புதுடில்லி: "இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும், பிறந்த, 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே, மூன்று லட்சம் குழந்தைகள் இறந்து விடுகின்றன' என, அரசு சார்பற்ற அமைப்பு ஒன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில், உலகிலேயே இந்தியா முதலிடம் பிடித்துள்ளது."குழந்தைகளை காப்போம்' என்ற அமைப்பு சார்பில், வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பிறக்கும் குழந்தைகள் முதல் நாளிலேயே இறப்பது, இந்தியாவில் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மூன்று லட்சம் குழந்தைகள் இதுபோல் இறக்கின்றன.இதற்கு அடுத்த இடங்களில், நைஜீரியா (90ஆயிரம்), பாகிஸ்தான் (60 ஆயிரம்), சீனா (50ஆயிரம்), காங்கோ (48 ஆயிரம்), எத்தியோபியா (29 ஆயிரம்), வங்கதேசம் (28 ஆயிரம்), இந்தோனேசியா (23 ஆயிரம்), ஆப்கானிஸ்தான் (18 ஆயிரம்) போன்ற நாடுகள் உள்ளன.இந்தியாவில், பிரசவத்தின் போது, 170ல் ஒரு பெண், இறக்கிறார். நேபாளத்தில், இந்த அளவு, 190க்கு ஒன்று என்ற அளவில் உள்ளது. உலகம் முழுவதும், ஒவ்வொரு ஆண்டும், 10 லட்சம் குழந்தைகள், பிறந்த முதல் நாளிலேயே இறந்து விடுகின்றன. இவற்றில், 40 சதவீத குழந்தைகள், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தை சேர்ந்தவை.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.