FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on May 06, 2013, 11:22:06 PM

Title: கீரை காளான் சாப்ஸ்
Post by: kanmani on May 06, 2013, 11:22:06 PM
என்னென்ன தேவை?

பசலை தவிர்த்து ஏதேனும் ஒரு கீரை - 1 கட்டு,
காளான் - 200 கிராம்,
வெங்காயம் - 200 கிராம்,
தக்காளி - 150 கிராம்,
பச்சை மிளகாய் - 35 கிராம்,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிது,
இஞ்சி - 25 கிராம்,
தனியா தூள் - 75 கிராம்,
மிளகாய் தூள் - 40 கிராம்,
மஞ்சள் தூள் - 5 கிராம்,
உப்பு - தேவைக்கேற்ப,
சர்க்கரை - 10 கிராம்,
கரம் மசாலா தூள் (விருப்பப்பட்டால்) - 10 கிராம்,
பட்டை - 3 கிராம்,
ஏலக்காய் - 2 கிராம்,
கிராம்பு - 3 கிராம்,
சோம்பு - 15 கிராம்,
சீரகம் - 25 கிராம், பெருங்
காயத்தூள் - 15 கிராம்,
எண்ணெய் - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

கீரையையும் காளானையும் நன்கு கழுவி, சுத்தப்படுத்தி, நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம்  தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, முக்கால்பாகம் வதங்கியதும், நறுக்கிய தக்காளி சேர்க்கவும். அது நன்கு கரைந்து  வரும் போது, மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.

அடுத்து மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, 10 நிமிடங்கள் குறைந்த தணலில் வைக்கவும். விருப்பப்பட்டால் இந்த இடத்தில் கரம் மசாலா தூள் சேர்த்துக்  கொள்ள லாம். கொஞ்சமாக தண்ணீர் விட்டுக் கொதி வந்ததும், கீரையைச் சேர்த்துக் கிளறி, மூடி வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து, காளான் சேர்த்துக்  கிளறவும். எல்லாம் சேர்ந்து வெந்ததும், உப்பு சேர்த்து மறுபடி சிறிது நேரம் மூடி வைக்கவும். கடைசியாக சர்க்கரை தூவி இறக்கவும். இது சாதம்,  ஃப்ரைட் ரைஸ், பிரியாணி, சப்பாத்தி, பூரி என எல்லாவற்றுக்கும் பொருத்தமான சைட் டிஷ்!