FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on May 06, 2013, 10:54:06 PM

Title: மூளையில் இரத்தக்கட்டு ஏற்படுவதை கண்டுபிடிக்க சில அறிகுறிகள்!!!
Post by: kanmani on May 06, 2013, 10:54:06 PM
மூளையில் இரத்தக்கட்டு ஏற்படுவது ஒரு தொற்றுநோய் அல்ல. இது எந்த வயதினருக்கும் ஏற்படக்கூடியது. ஆனால், வயது அதிகரிக்கும் போது மூளையில் இரத்தக்கட்டு ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. இதற்கான காரணங்கள் சரியாக தெரியவில்லை. பரம்பரை மரபணு, கதிர்வீச்சு, புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு என சில காரணங்களால் மூளையில் இரத்தக்கட்டு ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது. மின் கம்பிகளுக்கு அருகே வசித்தல், அலைப்பேசிகளை அதிகமாக பயன்படுத்துவது, ஆஸ்பிரின் பயன்பாடு ஆகியவற்றுக்கும் மூளையில் இரத்தக்கட்டு ஏற்படுவதற்கும் தொடர்பு உண்டு என்று பரவலாக பேசப்பட்டாலும், அவை நிரூபிக்கப்படாத காரணங்களாகவே இருந்து வருகின்றன.

மூளை ஓடு, மூளையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதால் அல்லது மூளையில் இரத்தக்கட்டு ஏற்படும் இடத்தில் இயக்கக்கோளாறு ஏற்படுவதால், மூளையில் இரத்தக்கட்டு இருப்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடித்துவிடலாம். மேலும் வேறு சில அறிகுறிகள் கொண்டும், மூளையில் இரத்தக்கட்டு இருப்பதை அறியலாம். அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தலைவலி

அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் தலைவலி பொதுவாக மந்தமாகவும், நிலையானதாகவும், அவ்வப்போது துடிப்பு உடையதாகவும் இருக்கிறது. இயல்பாக கடுமையான தலைவலிகள் எதுவும் இருக்காது. இருமல், தும்மல், குனிதல் மற்றும் கடுமையான வேலையை செய்தல் ஆகிய சூழ்நிலைகளில் இந்த தலைவலி அதிகரிக்கும். இவை அனைத்தும் மூளையில் அழுத்தத்தை அதிகரிக்கும். சில சமயங்களில் தலைவலிகள் இரவில் அதிகரித்து, தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளவும் செய்யும்.

காய்ச்சல்

 மற்றும் குமட்டல் அதிகரிக்கும் அழுத்தம் காய்ச்சலை ஏற்படுத்தினால், பகல்பொழுதில் அது இன்னும் மோசம் அடையும். மேலம் திடீரென்று தோரணையை மாற்றினால், அது இன்னும் மோசம் அடையும். உதாரணமாக உட்கார்தல், படுத்தல் ஆகிய நிலையில் இருந்து, நிற்கும் போது காய்ச்சல் அதிகரிக்கும்.

வலிப்பு

வலிப்பு நோய்கள் மூலையில் இரத்தக்கட்டு இருப்பதற்கான இயல்பான அறிகுறி. கைகள், கால்கள் அல்லது முழு உடலையும் உதரும் காக்காய் வலிப்பு நோயும் சிலருக்கு ஏற்படலாம். சில சமயங்களில் இதனால் சுயநினைவு இழப்பும் ஏற்படலாம். வலிப்பு என்பது ஒரு அச்சுறுத்தும் அனுபவமாக இருக்கலாம். அப்படி ஒரு அனுபவம் இருந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடி, பரிசோதித்து சிகிச்சை பெற்றுக் கொள்ளவும். மூலையில் இரத்தக்கட்டு இருப்பது தவிற மற்ற மருத்துவ காரணங்களினாலும் வலிப்பு நோய் உண்டாகலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

தூக்க கலக்கம்

தூக்க கலக்கமும் ஒரு அறிகுறி ஆகும். மண்டை ஓட்டின் மீது அழுத்தம் ஏற்படுவதால் இது நிகழலாம். மேலும் இயல்பாக தூங்காத நேரங்களிலும், பகலிலும் அதிகமாக தூங்குவதை உணர்வீர்கள். இங்கு குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தவிர பார்வையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி, மங்கலான பார்வை, மிதக்கும் பொருட்கள் மற்றும் சுரங்கப்பார்வை ஆகிய அறிகுறிகளையும் கொடுக்கலாம். அது குழப்பத்தை ஏற்படுத்தி, உடல் சமன்பாட்டை பாதிக்கலாம்.

விநோதமான உணர்வுகள்

பயம் அல்லது தீவிர பரீட்சையம், விநோதமான வாசனைகள் அல்லது கருமையடைதல், பேச்சு மற்றும் நினைவு சிரமங்கள்.

பேச திணறுதல்

வார்த்தைகளை பேசவும், புரிந்துகொள்ளவும், எழுதுவதற்கும், வாசிப்பதற்கும், எளிய கணக்குகளை செய்வதிலும் பிரச்சனை ஏற்படுதல், சில அசைவுகளை ஒருங்கிணைப்பது, செல்லும் பாதையை கண்டிபிடித்தல் ஆகியவற்றில் சிரமம், உடலின் ஒரு பகுதி செயலிழந்து போதல் மற்றும் பலவீனம் அடைதல் ஆகியவையும் சில அறிகுறிகள் ஆகும்.

குணம் மற்றும் புத்திகூர்மையில் மாற்றம்

ஒருங்கிணைப்பு இல்லாத நடை மற்றும் உடலின் ஒரு பகுதியில் ஏற்படும் பலவீனம், நுகர்தல் உணர்வை இழத்தல், அவ்வப்போது பேச்சு திணறல் ஆகிய பிரச்சனைகளும் ஏற்படலாம்.

பார்வை பிரச்சனை

ஒருவர் ஆரம்பத்தில் கவனிக்காமல் வழக்கமான கண் பரிசோதனையின் போது கண்டுபிடிக்கக்கூடிய ஒரு கண் பார்வை இழத்தல்.

வித்தியாசமான உணர்வு

ஒருங்கிணைப்பு குறைவு, திக்குவாய், நிலையின்மை, கண்கள் இயல்புக்கு மாறாக துடித்தல், குமட்டல் மற்றும் கழுத்து கடினமடைதல் போன்றவையும்.

நிலையின்மை

 முகம் பொலிவிழந்து, ஒரு பக்கம் புன்னகை அல்லது கண் இமை தளர்ச்சி, இரட்டை பார்வை, பேசவும் விழுங்கவும் சிரமப்படுதல், நடந்த உடன் குமட்டல் அல்லது தலைவலி என்று படிப்படியாக அறிகுறிகள் ஏற்படலாம்.

உடல்நலம் சரியில்லாமை

தலைவலிகள், நோய்கள் மற்றும் பார்வை மற்றும் இயக்கம் சார்ந்த பிரச்சனைகள்.

கபச்சுரப்பி பிரச்சனை

 கபச்சுரப்பி பல்வேறுபட்ட ஹார்மோன்களை சுரக்கின்றது, இதனால் இந்த சுரப்பியில் இரத்தக்கட்டு ஏற்படும் போது பல்வேறு விதமான அறிகுறிகள் ஏற்படும். அவை நிலையற்ற மாதவிடாய், மலட்டுத்தன்மை, எடை அதிகரித்தல், மந்தம், உயர்ந்த இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மனநிலை தடுமாற்றம், கை கால்கள் விரிவடைதல் போன்றவை. மேலும் கபச்சுரப்பியில் ஏற்படும் இரத்தக்கட்டு, கண்களுக்கு செல்லும் நரம்புகளிலும் அழுத்தத்தை ஏற்படுத்தி, சுரங்கப் பார்வையை ஏற்படுத்தலாம்.

உடல் பலவீனம்

முகம் அல்லது உடலின் ஒரு பகுதியில் ஏற்படும் பலவீனம் மூளையில் இரத்தக்கட்டு இருப்பதற்கான மற்றொரு அறிகுறியாகும்.

வித்தியாசமான நடத்தை

சில சமயங்களில் மூளையில் ஏற்படும் இரத்தக்கட்டுகள் குணம் மற்றும் நடத்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அதுவும் இரத்தக்கட்டு மூளையின் மைய அரையுருண்டையில் இருக்கும் போது, இந்த அறிகுறி ஏற்படும். குறிப்பாக இந்த சூழ்நிலை அந்த நபருக்கும், அவருடைய குடும்பத்திற்கும் மிகுந்த பிரச்சனையை கொடுக்கும். ஆகவே ஒரு மனோதத்துவ நிபுணரின் ஆலோசனை சில நேரங்களில் உதவிகரமாக இருக்கும்.