FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on May 05, 2013, 10:53:49 PM

Title: ~ அழகான உதடு வேண்டுமா? ~
Post by: MysteRy on May 05, 2013, 10:53:49 PM
அழகான உதடு வேண்டுமா?

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.tamilkathir.com%2Fuploads%2Fimages%2F2013%2F04%2F05%2F98a7f945-4b3b-42a8-bb6e-4f2b73938a75_S_secvpf.jpg&hash=b07bb7988ba0dfcf72878385b7c669b0c22d15dd)


முகத்தை அழகாய்க் காட்டி, வனப்பைக் கூட்டுவதில் உதட்டுக்கு முக்கியப் பங்கு உண்டு. உதடுகளில் வறட்சி, கருத்துப் போதல், ஈரப்பசை இன்மை போன்ற காரணங்களால் உதட்டின் அழகு கெடும். தரமற்ற லிப்ஸ்டிக் பயன்படுத்தும்போது தோல் கருப்பாக வாய்ப்பு அதிகம் உள்ளது.

வேதிப்பொருட்கள் கலந்த பழச்சாறு குடிப்பதாலும் சில வகைப் பழங்கள், கொட்டைகளின் சாறு உதட்டில் படுவதாலும் வைட்டமின் பி குறைபாட்டினாலும் உதடு புண்ணாகி, அந்த இடம் கருத்துப் போகலாம். புண் இருந்தால், தினமும் தேங்காய் எண்ணெய் தடவினால் புண்கள் விரைவாக ஆறும்.

பல் துலக்கும்போதும், முகத்துக்கு ஸ்க்ரப்பிங் செய்யும்போதும், உதடுகளை லேசாகத் தடவிவிட்டால், உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி வழவழப்பாக இருக்கும். பன்னீர் ரோஜாவின் சாறு அல்லது பன்னீரும்கூட உதட்டுக்கு நல்ல நிறம் கொடுக்கும்.

உதட்டு நிறம் மாற தயிர், பாலாடையையும் உபயோகிக்கலாம். உதட்டில் தேன் தடவுவதன் மூலம், வறட்சி நீங்கி, பளிச்சிட வைக்கும். உலர் திராட்சையின் தோலை உரித்து, உதட்டின் மேல் தடவிவர, உதட்டில் பளபளப்புக் கூடும்.