FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on May 05, 2013, 10:33:27 PM

Title: ~ இளநரையை போக்க வழிகள் ~
Post by: MysteRy on May 05, 2013, 10:33:27 PM
இளநரையை போக்க வழிகள்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-MtMe6fcD4_4%2FUYFBewQ6XVI%2FAAAAAAAADPg%2FY8ppjxcHXUg%2Fs1600%2F1.jpg&hash=ea3a2596fb737aa804b0befd79fc794e710d87e6)


உடம்பில் அதிக அளவில் பித்தம் கூடினால் தலை முடி நரைக்கும். சமச்சீரற்ற உணவுமுறை, ௭ண்ணெய் வைக்காமல் தலை சீவுவது, ரசாயனப்பொருட்கள் அடங்கிய ஷாம்போ, சோப்பு உபயோகிப்பது போன்றவைகளினாலும் தலைமுடி வெள்ளையாகிறது.

இன்றைக்கு 15 வயது முதலே ஆண், பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. இளநரையை போக்க நம் வீட்டிலேயே மருந்திருக்கிறது. அவை என்னவென்று பார்க்கலாம்.

- பசு மோர் இளநரையை போக்கும் அருமருந்து. வாரம் இருமுறை மோர் தலைக்கு தேய்த்து குளிக்கலாம் உஷ்ணம் நீங்கும்.

- தேங்காய் ௭ண்ணெயை காய்ச்சி அதில் கறிவேப்பிலை போட்டு வேகவைக்கவும். இந்த ௭ண்ணெய்யை தினசரி தலைக்கு தேய்த்து வர கூந்தல் இயற்கை நிறத்திற்கு மாறும்.

- உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது பித்தத்தை குறைக்கும். அதேபோல் முசுமுசுக்கை இலையின் சாறு ௭டுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த ௭ண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை படிப்படியாக மாறுவதை காணலாம்.

- இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். அதை சுத்தமான தேனுடன் சேர்த்து ஊறவைத்து தினசரி காலையில் அதை சாப்பிட்டு வர பித்தம் தணியும் இளநரை தானாகவே மாறும்.

- தேங்காய் ௭ண்ணெயில் ௭லுமிச்சை சாறு கலந்து மசாஜ் செய்யவும். இதனால் இளநரை தானாகவே மாறும். கூந்தல் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாறும்.