FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on May 05, 2013, 07:48:35 PM

Title: ~ பீட்ரூட் சாறு மனிதர்களின் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது ~
Post by: MysteRy on May 05, 2013, 07:48:35 PM
பீட்ரூட் சாறு மனிதர்களின் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-c.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F225612_331769120283481_214856012_n.jpg&hash=64636aeac66d8f6ee6018aafb544f74a8cb5e74a)


பீட்ரூட் சாறு மனிதர்களின் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

லண்டன் மருத்துவக் கல்லூரியும் பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் தெரியவந்தன. தினசரி 250 மிலி லிட்டர் பீட்ரூட் சாறு குடித்தால் ஒருவரின் உயர் ரத்த அழுத்தம் சுமார் 10 எம் எம் அளவால் குறைந்து போனது ஆய்வில் தெரிய வந்தது.

பதினைந்து பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவில் உயர்ரத்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்த பலருக்கும் ரத்தஅழுத்தம் சராசரி அளவுக்கு குறைந்ததாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்தன. இவர்கள் பீட்ரூட் சாற்றை குடித்து மூன்று முதல் ஆறுமணி நேரம் கழித்து இவர்களின் உயர் ரத்த அழுத்தம் கணிசமாக குறைந்ததாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்தனர். மேலும் மறுநாளும் கூட இவர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைந்தே காணப்பட்டதாகவும் இவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஆய்வு முடிவு பற்றி மருத்துவ நூலான ஹைபர்டென்ஷன் தெரிவித்துள்ளது.

ரத்த நாளங்கள் விரிவடையும்

பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து மனிதர்களின் ரத்தநாளங்களை விரிவடையச் செய்கிறது. இரத்த ஓட்டம் சீராக செல்வதால், மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வலிகளை குறைக்கிறது.

அஞ்ஞைனா என்கிற இரத்தநாள வலிநோயால் அவதிப்படுபவர்களுக்கு நைட்ரேட் மருந்து அளிப்பதன் மூலம் அவர்களின் வலியை குறைக்கிறது. அதேபோல் நைட்ரேட் சத்து அதிகம் கொண்டிருக்கும் பீட்ரூட் சாறு அதே வேலையை செய்வதாக கருதுகிறார்கள்.

நைட்ரேட் சத்தை சேமிக்கிறது.

மண்ணில் இயற்கையிலேயே இருக்கும் நைட்ரேட் சத்தை தாவரங்கள் ஒவ்வொருவிதமாக உறிஞ்சும் தன்மையையும், சேமிக்கும் தன்மையையும் கொண்டிருக்கின்றன. இதில் பீட்ரூட் தாவரம் நிலத்தில் இருந்து உறிஞ்சும் நைட்ரேட் சத்தை தனது கிழங்கில் அடர்த்தியாக சேமிக்கும் தன்மை கொண்டது. எனவே இந்த பீட்ரூட் கிழங்கின் சாற்றை குடிக்கும் போது, அதில் இருக்கும் நைட்ரேட் மனிதர்களின் ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும் வேலையை செய்கிறது.

பக்கவிளைவுகள் அற்ற பீட்ரூட்

நைட்ரேட் சத்து அதிகம் இருக்கும் பீட்ரூட் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், ஒருவரின் உயர் ரத்தஅழுத்தத்தை கணிசமாக குறைக்க முடியும் என்கிறார் நிபுணர். இது பக்கவிளைவுகள் அற்ற மருந்து என்றும் அவர்கள் கூறுகின்றனர்.