FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on April 30, 2013, 12:26:18 AM
-
என்னென்ன தேவை?
புழுங்கலரிசி - 3 கப்,
துவரம் பருப்பு - 1 கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
தேங்காய் எண்ணெய் - சிறிது.
அரைப்பதற்கு...
தேங்காய் - 2 பத்தை,
மிளகாய் வற்றல் - 6,
சீரகம் - 2 டேபிள்ஸ்பூன்,
தனியா - 1 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 10.
எப்படிச் செய்வது?
அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை தண்ணீர் விட்டு அரைக்கவும். பிறகு அதை எண்ணெய் விட்டு பச்சை வாடை போக வதக்கி, களைந்த அரிசி, பருப்புக் கலவையுடன் சேர்த்து, உப்பும் சேர்த்து, அளவாகத் தண்ணீர் விட்டு, குக்கரில் 2 விசில் வைக்கவும். ஆறியதும் அதில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டுக் கிளறி, சிப்ஸ், வற்றல், அப்பளம், வெங்காய வடகத்துடன் பரிமாறவும்.