FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on April 27, 2013, 12:57:07 AM

Title: ஈசி ஃப்ளவர் கேக்
Post by: kanmani on April 27, 2013, 12:57:07 AM


    18 Cm வட்ட கேக்குகள் - 2
    அதே அளவு கேக் போர்ட் - ஒன்று
    சற்றுப் பெரிதான போர்ட் - ஒன்று
    டாய்லி (விரும்பினால்)
    பட்டர் கிரீம் ஐஸிங் - 4 கப்
    விரும்பிய கலரிங் & ஃப்ளேவரிங்
    ஏப்ரிகாட் ஜாம் - 3 மேசைக்கரண்டி
    சிறிது வெந்நீர் & ப்ரஷ்
    பாலட் நைஃப்
    ப்ரெட் நைஃப்
    டர்ன் டேபிள் (Turn Table)
    ஸ்டார் ஐஸிங் டிப் & பைப்பிங் பேக் (Star Icing Tip & Piping Bag)
    கிச்சன் டவல்
    அலங்கரிக்க பூக்கள் & இலைகள்

 
டர்ன் டேபிள் நடுவில் உயரம் குறைவான வட்டப் பாத்திரம் ஒன்றை வைக்கவும். அதன் மேல் கேக்கின் அளவில் உள்ள போர்டை வைத்து (போர்ட் கேக்கைச் சுற்றிலும் சில மில்லி மீட்டர்கள் பெரிதாக இருப்பது நல்லது). நடுவில் சிறிது ஐஸிங் ('திக் கான்சிஸ்டன்சி ஐஸிங்') தடவி ஒரு கேக்கை மட்டும் ஒட்டிக் கொள்ளவும். கேக்கின் மேற்பகுதிக்கு ஐஸிங் பூசிக் கொள்ளவும்.
   
இதனோடு இரண்டாவது கேக்கை சான்ட்விச் போல ஒட்டிக் கொள்ளவும். இரண்டும் ஒட்டிய இடத்தில் பள்ளங்கள் இல்லாமல் ஐஸிங் வைத்து நிரப்பிவிடவும்.
   
ஜாமை சிறிது வெந்நீர் சேர்த்து ஐதாக்கி(Dilute) கேக்கின் மேற்பகுதியிலும், சுற்றிலும் ப்ரஷ் செய்துகொண்டு, போர்ட் விளிம்பு வரை வருமாறு தடிப்பாக, ஐஸிங் (இருக்கும் மீதி ஐஸிங்கிற்கு பால் சேர்த்து 'தின் கான்சிஸ்டன்சி ஐஸிங் ஆக மாற்றி எடுக்கவும்) பூசிக் கொள்ளவும்.
   
கத்தியின் பின்பக்கத்தால் படத்தில் காட்டியுள்ளது போல் அடையாளம் செய்துகொள்ளவும்.
   
இதற்குப் பயன்படுத்திய கத்தி இதுதான். பயன்படுத்தும் கத்தியின் வெட்டும் விளிம்பு எப்படி அமைந்திருக்கிறது என்பதைப் பொறுத்து ஐஸிங் கோடுகள் அமையும்.
   
கத்தியைத் துடைத்துக் கொண்டு, அதன் வெட்டும் பக்கத்தை கேக்கில் வரைந்துள்ள கோடுகளை அடிப்படையாக வைத்து வளைத்து வளைத்து இழுக்கவும். ஆங்கில எழுத்து m வரைவது போல கத்தியை இழுக்கவேண்டும், ஆனால் கீழே கத்திப்பிடி அதே இடத்திற்குத் திரும்ப வர, மேல் பகுதி கத்தி மட்டும் விலகிக் கொண்டே போகவேண்டும். அழுத்தாமல் மேலாகப் பிடித்து இழுக்க வேண்டும்.
   
கத்தியை கேக்கின் வெளி ஓரத்தில் செங்குத்தாகப் பிடித்து டர்ன் டேபிளைச் சுழற்றிக் கொண்டு இதே போல சுற்றிலும் ஸ்காலப்ஸ் வரையவும். (மேலே விசிறி வரையும் போது கத்திப் பிடி இருந்த இடத்தில் ஆரம்பிக்கவும்).
   
மேலே சுற்றிலும் வட்டமாக ஸ்டார்ஸ் பைப் செய்யவும்.
   
ஓரத்தில் ஐஸிங் ஆரம்பித்து முடித்த இடத்தில் சீரில்லாதது போல ஒரு கோடு தெரியும். அதன் மேல் ஸ்டார் டிப் கொண்டு டிசைன் வரைந்து மறைத்துவிடவும்.
   
இனி கேக்கை தட்டோடு தூக்கி, கவனமாக அதற்கென்று எடுத்து வைத்துள்ள தட்டிற்கு மாற்றி விரும்பியவாறு அலங்கரித்துக் கொள்ளலாம்.

 
அலங்கரிக்க பூக்கள் & இலைகள் செய்வதற்கு இங்கே சொடுக்கவும்:
ஃபாண்டன்ட் பூக்கள் & இலைகள்