FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on April 23, 2013, 08:16:53 AM
-
சம்பா கோதுமைரவை - முக்கால் கப்
துவரம் பருப்பு - கால் கப்
சின்ன வெங்காயம் - 10
கேரட் - ஒன்று (சிறியது)
முருங்கைக்காய் - ஒன்று
கத்தரிக்காய் - ஒன்று (சிறியது)
சுரைக்காய் - சிறிய துண்டு
கொத்தவரங்காய் - 3
புடலங்காய் - ஒரு சிறிய துண்டு
வாழைக்காய் - ஒன்று (சிறியது)
தக்காளி - ஒன்று
முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி (விரும்பினால்)
பச்சை மிளகய் - 2
கறிவேப்பிலை - 2 இணுக்கு
புளி - நெல்லிக்காய் அளவு
சாம்பார் தூள் - 2 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
அரைக்க:
தேங்காய் துருவல் - அரை கப்
சின்ன வெங்காயம் - 2 (அ) 3
பூண்டு- 2 (அ) 3 பல்
சீரகம் - முக்கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - முக்கால் தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 இணுக்கு
கோதுமை ரவை மற்றும் துவரம்பருப்பைக் கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். புளியைக் கரைத்து வைக்கவும்.
அரைக்க கொடுத்தவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். (தேங்காயின் அளவை அரை கப்பிற்கு சிறிது குறைவாகவும் சேர்த்து அரைக்கலாம்).
அனைத்து காய்கறிகளையும் ஒரு இன்ச் நீள விரலளவு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு, சூடானதும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.
தக்காளி சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
காய்கறிகளைச் சேர்த்து மேலும் 3 நிமிடங்கள் வதக்கவும்.
காய்கள் வதங்கியதும் ஊறவைத்த கோதுமைரவை, துவரம் பருப்பு, இரண்டரை கப் தண்ணீர், புளிக்கரைசல், சாம்பார் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் அரைத்த தேங்காய் கலவை சேர்க்கவும். முருங்கைக்கீரை சேர்ப்பதாக இருந்தால் தனியே ஒரு வாணலியில் வதக்கி சேர்க்கவும். குக்கரை மூடி 4 முதல் 5 விசில் வரும் வரை வேக விடவும்.
பிரஷர் அடங்கியதும் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து சேர்த்து கிளறவும்.
சுவையான கோதுமைரவை கூட்டாஞ்சோறு தயார். வெங்காய ரைத்தா, அப்பளம், வறுத்தரைத்த துவையலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்கரை திறந்தவுடன் சாதம் சற்று நீர்க்கத்தான் இருக்கும். அப்போதுதான் ஆறும் போது அதிகம் கெட்டியாகி விடாமல் பதமாக இருக்கும். காய்கறிகள் நம் விருப்பம் போல் சேர்க்கலாம். குடை மிளகாய், முள்ளங்கி பொருந்தாது. இதே முறையில் அரிசியிலும் செய்யலாம். சுவையாக இருக்கும்.