FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on April 23, 2013, 08:15:33 AM

Title: பீஃப் பிரியாணி
Post by: kanmani on April 23, 2013, 08:15:33 AM

    சம்பா அரிசி - 4 கப்
    பீஃப் - ஒரு கிலோ
    பெரிய தக்காளி - 3
    பெரிய வெங்காயம் - 3
    தயிர் - ஒரு கப்
    மல்லித் தழை - ஒரு கட்டு
    இஞ்சி, பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
    உப்பு - 2 + 2 தேக்கரண்டி
    நெய் + எண்ணெய் - 2 + 1 தேக்கரண்டி (சாதத்துக்கு)
    எலுமிச்சை - அரை மூடி
    மஞ்சள் புட் கலர்
    மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
    மல்லித் தூள் - 2 மேசைக்கரண்டி
    மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
    கரம் மசாலாத் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
    பட்டை, ரம்பை இலை, கறிவேப்பிலை, ஏலக்காய் - தாளிக்க

 

 
   

இறைச்சியை கழுவி சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள், தயிர், ஒரு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள் தவிர மற்ற தூள் வகைகள் சேர்த்து, அரை மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.. வெங்காயத்தை பொன்னிறமாக பொரித்து வைத்துக் கொள்ளவும்.
   

வெங்காயம் பொரித்த எண்ணெயை சூடாக்கி, மீதமுள்ள இஞ்சி, பூண்டு விழுது, கறிவேப்பிலை, ரம்பை இலை, பட்டை, ஏலக்காய் தாளிக்கவும். பின் மிளகாய் தூள் சேர்த்து கலந்து பிரட்டவும். சிவப்பு நிறமாக வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
   

அதனுடன் பிரட்டி வைத்திருக்கும் கறிக்கலவையை சேர்த்து நன்றாகக் கிளறி, மல்லித் தழை, பொரித்த வெங்காயம் சேர்த்து அடுப்பில் வைத்து குறைந்த தீயில் வேக வைக்கவும்.
   

கறியைக் கிளறிவிட்டு, தேவையான அளவு நீர் ஊற்றி குக்கரை மூடி, 3 விசில் வரும் வரை அப்படியே வைக்கவும். (கிரேவியில் கறி மிதக்குமளவு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்).
   

மற்றொரு பாத்திரம் அல்லது ரைஸ் குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு, தாளிப்பு பொருட்களை சேர்த்து தாளித்து, களைந்த அரிசி,8 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். (நான் 4 கப் தண்ணீர், 4 கப் தேங்காய் பால் சேர்த்து செய்துள்ளேன்).
   

சாதம் தயாரானதும் மெதுவாகக் கிளறி அதை கறி கிரேவியில் போடவும்.
   

மீதமுள்ள பொரித்த வெங்காயம், சிறிது மல்லித் தழை தூவி, மஞ்சள் புட் கலர் சேர்த்து, எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு, தீயை குறைத்து 10 நிமிடம் தம்மில் போடவும்.
   

சுவையான பீஃப் பிரியாணி ரெடி.