FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on April 20, 2013, 09:30:48 AM

Title: பருக்கள் இல்லாத பொலிவான முகத்தைப் பெற சில வழிகள்!!!
Post by: kanmani on April 20, 2013, 09:30:48 AM
தற்போது முகப்பரு தொல்லைகளால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதற்கு எந்த மாதிரியான முயற்சிகளை மேற்கொண்டாலும், சரியான தீர்வு கிடைப்பதில்லை. எனவே பலர் இத்தகைய பருக்களை போக்குவதற்கு கெமிக்கல் கலந்த பொருட்களை விட, இயற்கை முறைகளையே நாடுகின்றனர்.

அத்தகையவர்களுக்காக சிறப்பான தோற்றம் அளிக்கும் சருமத்தைப் பெற இந்த கட்டுரை வழிகாட்டும். ஆகவே எதிர்பார்த்து வரும் பளிங்கு போன்ற முகத்தோற்றம் பெற பின்வரும் வழிகளை கடைப்பிடித்து வாருங்கள்.


1. சாலிசிலிக் அமிலம் அடங்கிய திரவத்தைக் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இதனால் இந்த அமிலம் முகப்பருவிலிருந்து விடுதலை பெற பெரும் உதவி புரியும்.

2. ஆப்ரிகாட் பழத்தை வைத்து முகத்தை ஸ்கரப் செய்தால், அது இறந்த செல்களை நீக்கி சிறந்த முகத்தோற்றத்தை தரும்.

3. க்ரீன் டீயை வைத்து ஸ்கரப் செய்தாலும் முகம் சிவத்தலையும், தோல் உடைதலையும் தவிர்க்கலாம்.

4. வெள்ளரிக்காயை அரைத்து முகத்திற்கு மாஸ்க் போன்று உபயோகித்தால், அது முகத்தை மேம்படுத்தி முழு நிறைவாக்கும். அதிலும் அறை வெப்பநிலையில் காய விடுங்கள். காற்றாடிக்கு முன் நின்று காய வைத்தால் அது எந்தப் பயனையும் தராது. காய்ந்த பிறகு அதை உரித்து எடுத்து, தண்ணீர் கொண்டு கழுவி எடுக்க வேண்டும். முகப்பருவின் மீது பனிக்கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்தாலும், முகப்பருவின் அளவை அது குறைக்கும்.

5. காட்டன் சிறிது எடுத்துக் கொண்டு, பெராக்சைடில் நனைத்து முகப்பருவின் மீது தடவுங்கள். இது எரிச்சலை தரலாம், ஆனால் நல்ல மாற்றத்தை தரும். விருப்பபட்டால் ஆல்கஹாலை கூட இவ்வாறு பயன்படுத்தலாம். ஆனால் அது அதிக எரிச்சல் தரும் என்று பரவலாக கூறப்படுகிறது.

6. ஸ்ட்ரிடெக்ஸ் (Stridex) எனப்படும் துடைப்பான்களை உபயோகப்படுத்தலாம். இது சாலிசிலிக் அமிலம் மற்றும் பிற நல்ல வினைப் பொருட்களுடன் கூடிய வட்டவடிவிலான பஞ்சு. இதில் ஆல்கஹால் அற்ற வகைகளும் கிடைக்கின்றன. இது எரிச்சலை தராதது. ஒவ்வொரு நாள் இரவும் இதை முகத்தின் மீது காயும் வரை வைக்கவும். இது முகத்தை அழுத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும், முகத்திற்கு சிறந்த முறையில் உதவும். ஆரம்பத்தில் இது முகத்தில் வறட்சியை ஏற்படுத்தலாம். தொடர்ந்து உபயோகிக்க சருமம் இதற்கு பழக்கப்பட்டுவிடும்.

குறிப்புகள்: -

- முகத்தை தொடுவதற்கு முன் கைகளை நன்றாக கழுவுங்கள்.
- சமச்சீரான உணவு உட்கொள்வது மாசற்ற சருமத்தை பேண உதவும்.
- மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். அது முகப்பருவை உண்டாக்கலாம்.


 எச்சரிக்கை:


* அனைத்து முறைகளையும் ஒரே நாளில் செய்யக்கூடாது. வாரம் ஒருமுறையோ அல்லது சில தினங்களுக்கு ஒருமுறையோ செய்ய வேண்டும்.

* ஒரே நாளில் முகப்பரு மறையும் என்று எதிர்பார்க்க வேண்டாம். அதற்கு சில காலம் பிடிக்கும்.

* கையைக் கழுவாமல் முகத்தை தொட வேண்டாம்.

* பருவை கிள்ளிவிடவோ, உடைக்கவோ முயல வேண்டாம். அது ஆறாத வடுவாய் அமைய நேரிடும்.