FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on April 19, 2013, 01:05:02 PM

Title: தனிமை
Post by: ஆதி on April 19, 2013, 01:05:02 PM
மிக லாவகமாக
எனது முழுநிலப்பரப்பிலும் பரவியிருக்கும்
இத்தனிமை
ஒரு 'ஜெல்'லென நெகிழ்ச்சியோடுத் தானிருக்கிறது
எனினும்
இதன் கடும்பிசுபிசுப்பும் ஈரகன‌மும்
துடைத்த‌ழிப்ப‌த‌ற்கும்
காய்த‌லுக்கும் அரிய‌தாக‌வும்
அக‌ற‌லுக்கு சுல‌ப‌ம‌ற்ற‌தாக‌வும்
விடுப‌டுத‌லுக்கு இய‌லாத‌தாக‌வும் இருக்கிற‌து
ஒரு குட்டி ஆடென‌
உன் நினைவுக‌ளை
என் நில‌த்தில் விடுந்த‌ருண‌ங்க‌ளில்
அத‌ன் துருதுருப்பான நடன துள்ளலில்
தன் கடும்பிசுபிசுப்பையும், ஈரகனத்தையும்
சுரண்டி பெயர்த்து
அழிந்து மறைகிற‌து தனிமை

 
Title: Re: தனிமை
Post by: Global Angel on April 19, 2013, 01:33:37 PM
ஆமா யார் நினைவ ? சமந்தவோட நினைவு?

அருமையான கவிதை .. தனிமை அதன் கொடுமை ...  ஷபாஆஆஆஆ வேணாமே சந்தோசமா இருப்போம் நாம எபவும் சந்தோசமா இருப்போம் ... இருக்குற போல காமிக்க செய்யலாமே ..  ;D ;D ;D ;D ;D ;D