FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on October 20, 2011, 10:59:07 PM
-
மாவீரகள் நீங்கள்
உங்களுக்காக
உங்கள் குடும்பத்திற்காக
உயிர் துறந்திரோ இல்லை
விடை தெரியா
விடியளுக்காக
விழித்திருந்து பாடுபட்ட
பறவைகள்..
நான்குபுறமும் படை சூழ
உயிருக்கு பயந்து
மக்கள் வீதியில்
அங்கும் இங்குமாய்
ஓடி திரிய
கண் முன்னே
ஆயிரம் சடலங்கள்...
மன உறுதியோடு
ஆயதங்களை ஏந்தி
போரடினாயே
உன் போராட்டத்தின்
பலன் கிடைக்கவில்லை என
பலர் ஏசினாலும்
உன் துணிவும்
தைரியமும்
இனி ஒருவனுக்கும்
வர போவதும் இல்லை
காடுகளிலும்
மேடுகளிலும்
விடுதலைநோக்கி
உன் பாத சுவடுகள்..
தலைவணங்குகிறோம்
தமிழனின் வாசனை
ஈழத்தில்
வீச கூடாது
என்று எண்ணியோ
நச்சு மருந்து இட்டு
எம் மக்களை கொன்றாய்..
எம் மக்கள் சிந்திய
ரத்தத்தில் தெரியும்
எம் தமிழ் வாசனை..
வரலாறு மாசுபடிந்து
போயிற்று...
கவலை இல்லை...
புது வரலாறு படைக்க
புதைந்தவர்கள் நீங்கள்!!!!
எதிர்கால வரலாற்றை
எழுத உம் ரத்தத்தை பரிசளித்தீர்கள்
எழுதுவோம் புது வரலாறு
இருண்டு போனபக்கங்களை
தூக்கி எறிந்தோம்
இனி ஒரு புது உருவாக்கம்
உதயமாகும் ...
கண்ணிற் விட்டு
கதற மாட்டோம்
உன் கல்லறையில்
நீ ஆதவன்
உனக்கு ஏது அழிவு.. ;)
-
////கண்ணிற் விட்டு
கதற மாட்டோம்
உன் கல்லறையில்
நீ ஆதவன்
உனக்கு ஏது அழிவு.. ;)///
கண்டிப்பாக விடியல் வரும் காத்திருப்போம்
-
வரலாறு மாசுபடிந்து
போயிற்று...
கவலை இல்லை...
புது வரலாறு படைக்க
புதைந்தவர்கள் நீங்கள்!!!!
ivarkal puthaikkap paddavargal aalla vithaikkap paddavarkal :)
-
Trueeeeeeeeeeeeee