FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on April 18, 2013, 08:30:23 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fupload.wikimedia.org%2Fwikipedia%2Fcommons%2F4%2F44%2FPrabhakaran_-_Thamizhar_eluchiyin_vadivam.jpg&hash=84e6ee3aa648d786bb90d6bde5177c0a41a2b233)
தானை ஒன்று கொண்டு
வானை வெல்ல புறபட்டான்
காளை அவன் வீரம் தன்னில்
கயவர் வீழ்ந்தார் மண்ணில்
கண்படும் அவன் சோபை தன்னில்
வரிப் புலியது வாழும் உள்ளில் ..
சேரனும் சோழனும்
நாம் காணா வரலாற்று நாயகராம்
இவர்தம் இழையங்கள் வரம்பெற்று
எழுந்தவந்தான் காலம் தந்த கரிகாலன்
அன்னையை பார்த்திடலாம் அரவணைப்பில்
தந்தையை பார்த்திடலாம் பாசத்தில்
அண்ணனை பார்த்திடலாம் நன் நெறியில்
தம்பியை பார்த்திடலாம் தயைகளில்
வள்ளலை பார்த்திடலாம் எண்ணம் தன்னில்
மாமனை பார்த்திடலாம் புன்னகையில்
நண்பனை பார்த்திடலாம் தோள் கொடுப்பதில்
உறவென்று வேண்டுமென்றால் இவை நீ கண்டிடலாம்
உறுமல் தான் வேண்டுமென்றால் பகை நீ கொண்டிடலாம்
உறுமல் தான் கொண்டுவிட்டால் உறக்கம் தான் மறந்திடுவான்
பகைவர் உதிரம்தான் காணாது ஒரு மிடறு அருந்திவிடான் .
தமிழ் மொழி காக்க இனம் காக்க தன் மானம் காக்க
வீட்டுகொருவர் நாடி நின்றான்
தன் வீட்டினையே தந்துவிட்டான்
மகத்தான தலைவன் தன்னை மாவீரன் என்று சொன்னார்
மரணம் தான் தழுவாமல் மாவீரன் ஏது என்றான் ..
மகளுக்கும் மகனுக்கும் மடங்காக பணம் கொள்ளும் தலைவர் தன்னுள்
மறவர்தம் வாழ்வுக்காய் மகவு அனைத்தும் தந்தான் ..
வள்ளலில் சிறந்தவனாம் கர்ணன்
அவனை விஞ்சி வாழ்தலில் சிறந்த நீ எம் மன்னன்
கள்வராய் இனம் சூறை கொள்ள
இனம் காணாது வளர்ந்த புல்லுரிவி
கரிகாலன் உன் சேனை தனை காவு கொள்ள
காலனும் கொண்டானையா மரணவலி .
மாவீரன் இறப்பதில்லை மரணம் அவனை கொள்வதில்லை
வா வீரா எழுந்து வா
வாஞ்சை கொண்ட தமிழ் புலிகள்
வானரம் போல் அணை செய்வோம்
எதிரி வான் அடைய வழி சமைப்போம் .
-
அருமையான கவிதை பூமியின் தேவதை நன்றி... மெல்லும் எழுதுங்கள்
-
nichyam eluthuren :P thanks