FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on April 18, 2013, 01:20:13 AM

Title: விழிகளின் சிவப்பு
Post by: Global Angel on April 18, 2013, 01:20:13 AM
உன் கை பிடித்து நடந்த
கனவு நிமிடங்கள்
கரைகின்றது கண்ணீரில்
கரையேற துடுப்பு தேடும்
விழியின் ஈர்ப்பில்
விரிந்து அமிழ்ந்து
உதிர்கிறது ஒரு துளி நீர் உன் இருப்பு தேடி .

முடியாத தனிமை
முதிராத இளமை
கனியாத காதல்
காணாத கோலம்
ஒற்றை ரோஜாவின் இதழ் உதிர்வில்
ஓய்ந்து உறைகின்றது
கனவின் கை கலப்பில்
கலைந்த உறக்க விரிப்பில்
உதிர்ந்து சிதறும் கண்ணீர் முத்துக்கள்
கை கோர்த்து பெரும் வெள்ளத்தில்
விதைத்து செல்லும் சோக விம்பங்கள்
உடைந்து ஊறும் கன்னங்களில் ..

என்று எங்கு எப்போது எப்படி
விடை தெரியாத வினாக்களின்
விகுதிகளாய் விழிகளின் சிவப்பு
விடியலுக்காய் இருக்கலாம்
அன்றில் வீழ்வதட்காயும் இருக்காலாம் ..
Title: Re: விழிகளின் சிவப்பு
Post by: PiNkY on April 18, 2013, 10:54:11 AM
ரொம்ப அழகாக காதல் வலியை குறிப்பிட்டு இருக்கீர்கள்.. நெஞ்சத்தை அசைக்கும் கவிதை.. உங்கள் ரசிகை என்று சொல்லிக்கொள்ள பெருமை படுகிறேன்..  ;D
Title: Re: விழிகளின் சிவப்பு
Post by: Global Angel on April 18, 2013, 06:59:18 PM
ஹஹ நன்றி பிங்கி ... நீங்களும் மிக நன்றாகத்தான் எழுதுறீங்க ...