FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on October 20, 2011, 11:19:56 AM

Title: காதலின் விலை கண்ணீர்
Post by: thamilan on October 20, 2011, 11:19:56 AM
உன் கண்ணில் சிக்கிக் கொண்டேன்
அது சிறை தான்
விடுதலையை விட
இந்த சிறை ஆனந்தமானது தான்

காதலா கண்ணீரா
எதையேனும் தேர்ந்தெடு என்றாய்
நான் காதலை தேர்ந்தெடுத்தேன்
அது கண்ணீரையே
விலையாகத் தந்தது

வாழ்க்கயா மரணமா
ஒன்றை தேர்ந்தெடு என்றாய்
வாழ்க்கையை தேர்ந்தெடுத்தேன்
அதுவோ
மரணத்தை நோக்கி
இட்டுச் சென்றது

மூச்சு வாங்கும் போதெல்லாம்
பிறக்கிறேன்
மூச்சை விடும் போதெல்லாம்
இற‌க்கிறேன்
நான் வாங்கும் மூச்சு
நீ விடும் சுவாச‌க்காற்று ஆச்சே

உன் ஊரின் பாதையில்
முட்க‌ள்
ஒவ்வொரு முள் குத்தும் போதும்
நீ முத்த‌மிடுவ‌தாக‌வே நினைக்கிறேன்

எளிதில் அடைய‌முடியாத‌ உன்னை
எப்ப‌டி அடைந்தேன் என்று கேட்கிறார்க‌ள்
காத‌லுக்கு காணிக்கையாக‌
க‌ண்ணீரை கொடுத்து என்றேன் நான்

காத‌லுக்காக‌வே
நீ என்றும் நான் என்றும் ஆனோமாம்
காத‌ல் உண்டான‌ பின்னால்
நீ ஏது நான் ஏது
Title: Re: காதலின் விலை கண்ணீர்
Post by: ஸ்ருதி on October 21, 2011, 09:38:33 PM
மூச்சு வாங்கும் போதெல்லாம்
பிறக்கிறேன்
மூச்சை விடும் போதெல்லாம்
இற‌க்கிறேன்
நான் வாங்கும் மூச்சு
நீ விடும் சுவாச‌க்காற்று ஆச்சே


wowwwwwwwww superb
Title: Re: காதலின் விலை கண்ணீர்
Post by: Global Angel on October 22, 2011, 07:47:13 PM
Quote
மூச்சு வாங்கும் போதெல்லாம்
பிறக்கிறேன்
மூச்சை விடும் போதெல்லாம்
இற‌க்கிறேன்
நான் வாங்கும் மூச்சு
நீ விடும் சுவாச‌க்காற்று ஆச்சே

cute one  ;)