FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on April 12, 2013, 12:09:04 PM

Title: வணக்கம் தீவிரவாதிகளே..
Post by: ஆதி on April 12, 2013, 12:09:04 PM
யாதுங்கள் தேவை ?

இறப்பா.. ?

யாதுங்கள் குறிக்கோள் ?

வெடிப்பா... ?

சகோதர பூமியில்
சாமாதிகளை படைப்பதுதான்
உங்கள் லட்சியாமா ?

புனிதமற்ற செயலை
புனிதப் போரென்பவர்களே..

உண்மையில் புனிதமென்பது
நன்நிலையில் மக்களை
இன்னலின்றி வாழவைப்பதா ?
பொன்னுயிரை பறிப்பதா ?

புனிதம் தானுங்கள்
போரென்றால்

இரத்ததானம் செய்திருப்பீர்
இரத்தவெறி கொண்டிருக்க மாட்டீர்..

அடுப்புக்கு வழி சொல்லியிருப்பீர்
வெடிப்புக்கு வழி செய்திருக்க மாட்டீர்

குப்பைகளை எரித்திருப்பீர்
குடிசைகளை மாட்டீர்..

தொழிலை தேடியிருப்பீர்
துப்பாக்கி சுமந்திருக்க மாட்டீர்..

ஆயுதங்கள் போட்டிருப்பீர்
அன்பை ஏந்தியிருப்பீர்..
தாயுலகை காத்தெங்கும்
சாந்தியென்று முழங்க்யிருப்பீர்


இதிலெதையும் நீங்கள் செய்யவில்லை
குறைந்தபட்சம் மனிதனாகவும் இருக்கவில்லை..

கன்னிகளை மட்டுமல்ல
கர்ப்பினிகளையும்
பாலாத்காரம் செய்த
பெருமை உங்களுடையது..

பால் நனைக்கும்
பிஞ்சு அதரங்களை
தாயின் இரத்தம் நனைக்க
பார்த்து சிரிக்கும்
இதயம் உங்களுடையது..


கடவுளின் பெயர் சொல்லி
கடவுளின் கோயிலை தகர்க்கும்
புனிதம் உங்களுடைய தென்றால்
புனிதம் புனிதமற்று போகட்டும்..

யாருடைய தன்னலத்திற்கோ
வெட்டுபடுகிற பலியாடுகளே..

மதத்துக்கு தானுங்கள்
போரென்றால்

ஒட்டுமொத்த உலகும்
ஒரே இரவில்
ஒரு மதத்துக்கு ஏற்றமாகும்..

கொன்ற
ஒட்டுமொத்த உயிர்களையும்
அதே இரவில்
மீட்டு தருவீரோ ?
Title: Re: வணக்கம் தீவிரவாதிகளே..
Post by: Global Angel on April 12, 2013, 06:45:13 PM
நிதர்சனமான உண்மைகள் ஆதி தீவிர வாதத்தால் வரக்கூடிய விளைவுகள் என்ன செய்கின்றார்கள் என்பதை மிகவும் அருமையாக பதிவிட்டிருகின்றீர்கள்  நன்றிகள் . எதோ ஒரு வித்தியாசம் உங்கள் கவிதை சந்தத்தில் ஹ்ம்ம்ம்ம் தேடுகின்றேன் என்னாவா இருக்கும் ...?
Title: Re: வணக்கம் தீவிரவாதிகளே..
Post by: PiNkY on April 13, 2013, 01:01:20 PM
மிக அறுபுதமான உண்மையை உங்கள் கவிதை வெளியிட்டு இருக்கிறது..