FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on April 09, 2013, 06:02:52 PM

Title: "க்கலாம்"
Post by: ஆதி on April 09, 2013, 06:02:52 PM
உன் துணையுடன்
நீ பேசிக் களித்திருக்கையில்
நானெங்கோ ஒரு ரயில் நிலையத்தின்
புத்தகடையில் வேடிக்கை பார்த்திருக்கலாம்..

உன் குழைந்தைக்கு
நீ நிலாசோறு ஊட்டுகையில்
அறியாத அந்நியர்களோடு
நான் பேசிக்கொண்டிருக்கலாம்..

எதோ ஒரு மழையை
நீ ரசித்திருக்கையில்
இழுத்துப்போர்த்தி நான்
ஆழ்ந்து உறங்கியிருக்கலாம்..

இப்படி உனக்கும் எனக்கும்
எந்த சம்பந்தமும் இல்லை
என்றான பிறகும்..
உருகும் கண்களோடும்
இறுக்கமான இதழ்களோடும்
அறியாதவரை போல
நடந்து கொள்ள..
நமக்காக ஒரு சந்திப்பு
எங்கோ காத்திருக்கலாம்..
Title: Re: "க்கலாம்"
Post by: sasikumarkpm on April 09, 2013, 06:08:26 PM
உருகும் கண்களோடும்
இறுக்கமான இதழ்களோடும்
அறியாதவரை போல
நடந்து கொள்ள..
நமக்காக ஒரு சந்திப்பு
எங்கோ காத்திருக்கலாம்..
.
.
நிஜமான வரிகள், வலிகளுடன்..
Title: Re: "க்கலாம்"
Post by: Varun on April 11, 2013, 12:21:52 AM
..நமக்காக ஒரு சந்திப்பு
எங்கோ காத்திருக்கலாம்..

அதி காத்திருப்பதும் சுகம் தானே நல்ல கவிதைகள் நண்பா
Title: Re: "க்கலாம்"
Post by: PiNkY on April 11, 2013, 04:12:38 PM
உருகும் கண்களோடும்
இறுக்கமான இதழ்களோடும்
அறியாதவரை போல
நடந்து கொள்ள..
நமக்காக ஒரு சந்திப்பு
எங்கோ காத்திருக்கலாம்..
.


சசி சொன்னது போல் மிக நிஜமான வரிகள் மட்டும் அல்லாமல் வலி நிறைந்ததும் கூட.. வருண் சொன்னது போல் வலி சுகமாக இருக்கலாம்., ஆனால் அதை அனுபவிக்க முடியாது.. அனுபவித்தால் தாங்க முடியாத சுகத்தை தரும்.. அது வேதனையையும் ., வலியையும் கூட்டும்..

உங்கள் கவிதை மிக அருமை  நண்பா.. கவிதையின் வலியில் என் மனம் கனக்கிறது..