FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on April 08, 2013, 12:58:59 PM

Title: சில கேள்வியும்.. இறைவனின் பதிலும்..
Post by: ஆதி on April 08, 2013, 12:58:59 PM
ஆண்டாண்டு காலமாய்
ஆண்டுவரும் ஆண்டவா
ஆண்டவன் என்பது எக்காலம் ?

ஆண்டாண்டாய் ஆண்டதெலாம்
ஆண்டாண்டில் முடிந்துவிட
ஆண்டாண்டாய் தொடர்ந்துவரும்
ஆண்டவன் என்பது முக்காலம்..

அறியா மைகவிழ்ந்து
அறியாத அறிவெல்லாம்
அறியாமை ஆனதுவா பெரும்பொருளே ?

அறியாத அறிவையெல்லாம்
அறியாமல் அறிந்துணர்ந்து
அறியாது வாழ்ந்துவரும்
அறியாத அந்தறிவே
அறியாமை மானிடமே!

விண்மீன்கள் தாண்டி எங்கள்
விஞ்ஞானம் தேடி செல்லும்
வினாவுக்கு விடையென்ன முதற்துகளே ?

விண்ணெல்லாம் கடந்தாலும்
விண்மீன்கள் துளைத்தாலும்
விஞ்ஞானம் தேடிச் செல்லும்
வினாவுக்கு விடையெல்லாம் உன்னினிலே!

எட்டிள சுரமதிலே
எந்த சுரம் உன் சுரம்
எப்பாடல் உன் பாடல்
எக்கருவி உன் கருவி சொல்தேவா ?

ஒன்வாய் குழல்நீ
ஐம்பொறி என் சுரம்
அடங்கி இசைத்தால் என் பாடல்
அறியாமல் தொடர்கிறது உன் தேடல்…

எவையெவை ஒழுக்கம்
எவையெவை இழுக்கு
சொல் என் இறைவா ?

உனக்கு நீயே
அஞ்சாத நிலையில்
எவைக்கு அஞ்சி
என்ன பயன் ?
Title: Re: சில கேள்வியும்.. இறைவனின் பதிலும்..
Post by: Varun on April 08, 2013, 02:03:40 PM
விண்மீன்கள் தாண்டி எங்கள்
விஞ்ஞானம் தேடி செல்லும்
வினாவுக்கு விடையென்ன முதற்துகளே ?

அதி நல்ல கவிதை உங்கள் கவிதைகள் மிகவும் அருமைகவும்  சிந்திக்கவும் இருக்கு சூப்பர் நண்பா
Title: Re: சில கேள்வியும்.. இறைவனின் பதிலும்..
Post by: Global Angel on April 09, 2013, 05:46:05 PM
உண்மைதான் நமக்கு நாமே அஞ்சாத பொழுது இறைவனை எங்கு தேட முடியும் தேடினால் கிடைக்குமா .... பலர் இதை போலதான் இருகின்றார்கள் ... சில நேரம் நானும் ...! நல்ல கவிதை ஆதி எதாவது காதல் கவிதை எழுதலாமே ரொம்ப நாளாச்சு உங்கள் காதல் கவிதை
படித்து .. என்னமோ சாமியார் மடத்துக்கு வந்த பீல்