FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on April 08, 2013, 05:04:47 AM
-
வெட்கத்தை விதைத்துக் கொள்ளும் பொழுதுகளும்
சத்தத்தை அடக்கி சயனித்து பயணிக்கின்றது
எட்டத்தே ஒரு கோட்டான்
எக்கி எக்கி குரல் எழுப்பி
அச்சத்தை இதய சந்துகளில் அலைய வைத்தது
பட்டென்று எங்கோ எதோ
படர்ந்துவிட்ட காற்றின் எதிர்ப்பில்
பயணித்து அலைந்த
முடிகளின் முனையில்
முடியாமை மண்டி இடுகின்றது ...
மரணப் பாதையிலும்
மனதோடு இணைந்து
மகிழ்வில் பயனிப்பாய் என்றிருந்தேன்
மனதோர சுவர்களில்
நிழல்களை பதித்த நீ
நிஜங்களை வேறு ஒருத்திக்கு
மானியம் ஆக்கியதேன் ...?
விசிறியாய் மடியும் இமைகளிலும்
சடுதியாய் வந்தமரும் உன் நினைவுச் சுமைகள்
கடு கதியில் கண்ணீராய் ஊற்றெடுக்கிறது
தொட்டணைக்க உன் கரம் தேடிய பொழுதில்
தட்டிக் கழித்த உன்
தாட்சண்யமற்ற வரிவடிவம் புலப்படுகிறது ...
இரவின் தனிமைகளை வெறுமைகள் ஆக்கியபடியே
உன் நினைவுகளின் நகர்வுகள் தொடர்கிறது ..
கனவுகளின் சுமைகளில்
அடிக்கடி நீ கருத் தரித்து குறைப் பிரசவமாகிறாய் ..
ஒரு பாலைவனத்தின் வறண்ட பிளவுகளாய்
வறண்டு தகிக்கும் இதய நாக்குகள்
வடிகிண்ற கண்ணீர் துளிகளை நக்கி நனைகின்றது ...
விடியாத இருளும் முடியாத துன்பமும்
மிரட்டியபடி விரட்டும் கோர இரவின் பிடியில்
கனவுகள் குலைந்த குயிலாய் கூவுகின்றேன் அகாலத்தில் ...
வாழ்க நீ பல்லாண்டு ...
-
இரவின் தனிமைகளை வெறுமைகள் ஆக்கியபடியே
உன் நினைவுகளின் நகர்வுகள் தொடர்கிறது ..
கனவுகளின் சுமைகளில்
ரொம்ப ஒரு அழகான கவிதை தோழி ரோஸ் ...உங்கள் கவிதைக்கு நான் ரசிகன் ..இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நன்றி தோழி
-
மிக அருமையான வரிகள்.. நீங்க நல கவிதைகு வார்த்தைகளை கண்டு பிடிகுறீங்க நல தமிழ் புலவி நீங்கள்.. எனக்கும் தமிழ் கற்றுக் கொடுங்களேன் கவிதை எழுத..
இந்த கவிதை ஒரு காதல் கதையையே சொல்லிவிட்டது.. ஏமாந்த பெண்களின் மனது இது போல் அல்லவே..? வருந்தும்,,...
தொட்டணைக்க உன் கரம் தேடிய பொழுதில்
தட்டிக் கழித்த உன்
தாட்சண்யமற்ற வரிவடிவம் புலப்படுகிறது ...
நல வரிகள்.. இது என்னை மிகவும் கவர்ந்தது
-
வார்த்தைகள் நிறைய புத்தகம் படித்தால் வந்துவிடும் பிங்கி ... நிறைய வாசிங்க ... நன்றி உங்கள் பின் ஊட்டத்திட்கு .