FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on April 06, 2013, 11:38:04 AM

Title: காரச் சட்னி
Post by: kanmani on April 06, 2013, 11:38:04 AM

என்னென்ன தேவை?
சின்ன வெங்காயம் - 1 கப், தக்காளி  - 1, பூண்டு - 2 பல், காய்ந்த மிளகாய் - 6 முதல் 8, புளி - 1 சிறு துண்டு, உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க... கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?
வெங்காயம் முதல் உப்பு வரையிலான அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். தாளித்து, அதை சட்னியின் மேல் கொட்டவும். தாளிப்பின் மேல் சட்னியை விட்டுக் கொதிக்க விடக்கூடாது.