FTC Forum
தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Yousuf on October 17, 2011, 06:48:35 AM
-
கண்டிப்பாக இந்த தலைமுறையினர் ஒரு விதத்தில் பெரும் பாக்கியம் பண்ணி இருக்க வேண்டும். எவ்வளவு சொகுசான வாழ்க்கை எந்த மூலையில் நடந்தாலும் அதை உடனே அறிய தொலைகாட்சிகள், இடம் விட்டு இடம் பெயர சொகுசு கார்கள், தகவலை ஒரு ஒரே நொடியில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தெரிவிக்க போன் வசதி அதிலும் செல்ஃபோன்கள் வசதி இன்னும் பிரமாதம்.
பெரும்பாலானாவர்கள் இந்த செல்ஃபோன்களுக்கு அடிமையாகவே ஆகிவிட்டனர். இதில் உள்ள வசதிகளால் இந்த செல்போன்கள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த செல்ஃபோன்களில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இந்த செல்ஃபோன்களின் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது. இந்த செல்போன் கதிர் வீச்சினால் மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் செல்ஃபோன் உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விஷயம் நாம் செல்ஃபோன் உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.
செல்ஃபோன் பயன்படுத்தினால் மூளைப்புற்றுநோய்?!
உண்மையைச் சொல்லனும்னா, இப்பெல்லாம் செல்ஃபோன் இல்லன்னா மனுஷனுக்கு வாழ்க்கையே இல்லங்கற நெலமதான்! ஆமாம் இல்லையா பின்ன? செல்ஃபோன் இருந்தா எதுவேணும்னாலும் பண்ணலாம். செல்போன் கண்டுபிடிச்சது என்னவோ போற எடத்துக்கெல்லாம் எடுத்துகிட்டு போய் பேசறதுக்குதான்னாலும், இப்பொ நெலமையே வேற!? செல்ஃபோன் வச்சி நல்லதும் பண்ணலாம் கெட்டதும் பண்ணலாம்.
அதாவது, செல்ஃபோன் பயன்படுத்தினா மூளைக்கு பாதிப்பு வரும் அப்படின்னு ரொம்ப நாளா ஒரு பேச்சு இருக்கு. அதுக்கு காரணம் செல்ஃபோன்கள் வெளியிடுகிற ஒரு வித ரேடியோ அலைகள்தான் (Radio frequency) அப்படின்னு சொல்லப்பட்டு வந்தது. இந்த செய்தி உண்மைதான்னு சொல்கிறது உலக சுகாதார மையம் (The World Health Organization (WHO)) நடத்திய பத்து வருட கால ஆய்வு ஒன்று! அது மட்டுமில்லீங்க, 10 வருடமோ அதுக்கும் மேலயோ பயன்படுத்தினா மூளைப்புற்று நோயே வரும் வாய்ப்பு இருக்குன்னும் கண்டுபிடிச்சிருக்காங்க!
இது என்னடா வம்பாப் போச்சு அப்படிங்கிறீங்களா? என்ன பண்றது உண்மைன்னா ஒத்துக்க வேண்டியதுதான். சரி வாங்க அது என்னன்னு கொஞ்சம் விரிவாப் பார்போம். அதாவது, உலக சுகாதார மைய ஆய்வாளர்கள், சுமார் 13 நாடுகளிலிருந்து, 12,800 மக்களின் செல்ஃபோன் பயன்பாட்டை 10 வருடமா தொடர்ந்து சோதனை செஞ்சுருக்காங்க. இந்த ஆய்வறிக்கை இன்னும் வெளியிடப் படவில்லையனாலும் டெலிக்ராஃப் அப்படிங்கிற இங்கிலாந்து பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் "பத்து வருடமோ அல்லது அதற்கும் மேற்பட்ட காலமோ செல்ஃபோன் பயன்படுத்தினால் மூளைப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறதென்று" ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள்! இதற்கு காரணம் செல்ஃபோன்கள் வெளியிடும் ரேடியோ அலைகள்தான்னும் இந்த ஆய்வுல கண்டுபிடிச்சிருக்காங்க.
இது இப்படின்னா, செல்ஃபோன் தயாரிக்கிற நிருவனங்களும், சில விஞ்ஞானிகளும் இந்த செய்தி உண்மையில்ல, செல்ஃபோன் பயன்படுத்துறதுனால ஒரு பிரச்சினையும் இல்லன்னு சொல்லியிருக்காங்க!? ஆமாம் இதுல எத நம்புறது நாம? ஒன்னும் புரியல இல்ல? எது எப்படியிருந்தாலும் செல்ஃபோன்ல இருந்து வெளிவர ரேடியோ அலைகளினால் கண்டிப்பா மூளைக்கு பாதிப்பு இருக்குன்னு ஆய்வாளர்கள் பல வருடமா சொல்லிக்கிட்டுதான் இருக்காங்க. அதனால, இந்த மாதிரி ஆய்வுகள் அவசியம்னு சொல்றாங்க விஞ்ஞானிகள். இந்த ஆய்வுக்கு ஆன செலவு எவ்வளவு தெரியுமா? 30 மில்லியன் அமெரிக்கன் டாலர்!
சரி, இப்போ முக்கியமான விஷயத்துக்கு வருவோம். அதாவது, இதப்படிச்சிட்டு இப்ப என்ன பண்றது அப்படின்னு யோசிக்கிற நண்பர்கள் எல்லாருக்கும்,
1. இந்த செல்ஃபோன் வெளியிடுற ரேடியோ அலைகளினால் எவ்வளவு பாதிப்பு வரும்?
2. அது எவ்வளவு அலைகள் வெளியிடுகிறது?
3. அதை எப்படி குறைக்கிறது?
இப்படி பல கேள்விகள் எழலாம். அதுக்கு எல்லாம் விடை தெரிஞ்சிக்கனும்னா, நீங்க இந்த இணையதளத்துக்கு போனீங்கன்னா தெரிஞ்சிக்கலாம்! அதேசமயம், இந்த அலைகளினால் ஏற்படுகிற பாதிப்புகள குறைக்கனும்னா, செல்ஃபோனில் அதிகம் பேசுறத தவிர்த்து, அதற்கு பதிலாக குறுஞ்செய்தி அனுப்புங்க அப்படின்னு பரிந்துரைக்கிறாங்க மருத்துவ வல்லுனர்கள்! மேலும் அலைவரிசை (அதாங்க சிக்னல்) குறைவா உள்ள பகுதிகள்ல செல்போன் பயன்படுத்தும்போது, ஸ்பீக்கர் போனையோ அல்லது ஹெட்செட்டையோ பயன்படுத்துங்க அப்படின்னு சொல்றாங்க!
உலக மக்கள்தொகையில் சுமார் 40 கோடி பேர் செல்போன் பயன்படுத்துறாங்க! அதுல கணிசமான அளவு குழந்தைங்க.அவங்களுக்கு மண்டை ஓடு மிக மிருதுவாக/மெல்லியதாக இருக்கும் என்பதால் இத்தகைய ரேடியோ அலைகளிலிருந்து மூளையைப் பாதுகாக்கும் திறன் குறைவே. அதனால் பெற்றோர் என்ன பண்ணனும்னா குழந்தைங்களுக்கு ஹெட்செட் மற்றும் ஸ்பீக்கர் போன் இருக்கிற செல்ஃபோன் வாங்கிக்கொடுக்கிறது மட்டுமில்லாம அவங்கள ஹெட்செட் மற்றும் ஸ்பீக்கர் போனை அதிகமா பயன்படுத்தும்படி வலியுறுத்தனும்னு பரிந்துரைக்கிறாங்க மருத்துவ வல்லுனர்கள்!
எல்லாத்தையும் விட மிக முக்கியமான ஒரு செய்தி இருக்கு மக்களே! அதாவது, மிக குறைந்த அளவு ரேடியோ அலைகள வெளியிடுற செல்ஃபோன் எல்லாம் இருக்கு தெரியுமா உங்களுக்கு? அதப்பத்தி விரிவா தெரிஞ்சிக்க/எந்த செல்ஃபோன் வாங்கினா நல்லது அப்படிங்கிற விவரத்தை எல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்கணும்.
காசு குடுத்து அந்த செல்ஃபோன் வாங்குற மக்களையும் அவங்களோட உடல் நலத்தையும் கணக்கிலெடுத்து, குறைந்த அளவு ரேடியோ அலைகள் வெளியிடுற செல்ஃபோன்கள தயாரிக்கும் நிறுவனங்களும் இருக்கத்தான் செய்யுது! உதாரணம்; ஸாம்ஸங் இம்ரெஷன் ஃபோன்.
செல்ஃபோன் கதிர்வீச்சு நம்மை தாக்காதவாறு தடுக்க சில வழிமுறைகள்
முடிந்த அளவு செல்ஃபோன்கள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் செல் போன்கள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட செல்போன்கள் பாதிப்பு அதிகம்.
o ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.
o குழந்தைகளிடம் செல்ஃபோனில் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.
o உங்கள் மொபைலில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில் (Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.
o காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட செல்ஃபோன்களின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
o தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.
o நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை 'ஆன்' செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்ப்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
o செல்ஃபோன்களில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
o செல்ஃபோன்களில் விளையாடுவதை முடிந்த அளவு தவிற்க்கவும் முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
o செல்ஃபோன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
o செல்ஃபோன்களை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.
o ஃபோனில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய ஃபோனின் Internal Antena பெரும்பாலும் ஃபோனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.
மேற்கூறிய முறைகளை கடைபிடித்தால் கண்டிப்பாக செல்ஃபோன்களின் கதிவீச்சில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.
-
naan ipellamphone pesurathila..... yaar irukkaaa :(
-
Yen kitalam Phone eh illai...! ;D
-
Very good and necesary informations . As cellphones are very important for the modern life, we must aware of this radiation infections too.Thank you yousuf.
-
Thank You Run!
-
Nala payanulla thagaval usf
Naan muthalarunthathuku ipa rompa kuraichuthen analum ipa pesurathu kuda athikam than ini athaiyum kuraikuren
Ama skyp mari net moolama pesurom la athula ethavathu intha mari kathirveetchu prblem iruka :SS
yarathu solungapa athaiyum kuraikanumanu :S ini epadi than nangalem kadala podurathu :|
-
நன்றி ரெமோ!