FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: RemO on October 14, 2011, 10:43:59 AM

Title: தடுமாறும் இந்தியா - போர் தொடுப்போம் வாரீர்
Post by: RemO on October 14, 2011, 10:43:59 AM
கொஞ்ச நாட்களாக எனது மனதில் எழும் கேள்வி " எங்கே செல்லும் இந்த பாதை தான்? யாரோ யார் அறிவாரோ????

இதற்கு  காரணம் இங்கு நடக்கும் நிகழ்வுகள் தான்,

நிகழ்வு-1  கோவையில் ஒரு 2 பள்ளி குழந்தைகள் கடத்தி, 11  வயது சிறுமியை கற்பழித்து கொலை.
நிகழ்வு-2  8  வயது சிறுமியை கற்பழிக்க முயன்ற 65 வயது முதியவரை பொது மக்கள் பிடித்து அடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
நிகழ்வு-3  காதலித்தவரின் மேல் உள்ள கோபத்தில் அவரது 6  வயது மகனை கொன்ற பெண்.
நிகழ்வு-4 பள்ளி சென்ற மாணவன் பணத்திற்காக கடத்தல்.
நிகழ்வு-5 சொத்து தகராறில் அண்ணன் குடும்பத்தை கொன்ற தம்பி

இவை அனைத்தும் இப்போது சமீப காலமாக செய்திதாளில் வந்தவை,
இதுமட்டும் இல்லாமல் கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தையை, மனைவியை / கணவனை கொலை செய்தது பணத்திற்காக கொலை செய்தது திருடியது என பல செய்திகள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இப்படியே சென்றால் அன்பு பாசம் மனித நேயம் இவை அனைத்தும் வெறும் புத்தகங்களில் மட்டும் தான் இருக்கும்.

இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன????
1 . காமம்
2 . போதை
3 . பணத்தாசை

காமம்
வெறும் உடல் சுகத்துற்காக புத்தி பேதலித்து கொடுரனாக மாறி பூக்க மொட்டுகளை கசக்கி எறிந்துவிடுகின்றனர் இந்த அசுரர்கள்
காமத்தை தீர்க்க காசு கொடுத்தால் வர ஆயிரம் பேர் இருக்கிறார்கள், அப்புறம் ஏன்டா குழந்தைகளை கொடுமை படுத்திறிங்க?
ஏதுமறிய அந்த பிஞ்சுகளிடமா உங்க காமத்தை காட்டனும்???

கள்ளக்காதல்
காதலை கொச்சை படுத்தும் வார்த்தை, பெயரே தப்பு.
இதில் காதலே இருப்பதில்லை வெறும் காமம் மட்டும் தான்.
உண்மையான காதலுக்கு கூட யாரும் கொலை செய்வதில்லை தற்கொலை தான் செய்கிறார்கள் ஆனால் கள்ளக்காதலுக்காக மணந்தவரை, பெற்ற பிள்ளையை கூட கொலை செய்ய தயங்குவதில்லை. காமம் தான் வாழ்க்கைனா கல்யாணம் ஏன் செய்யணும் அப்புறம் குழந்தைன்னு கூட பாக்காம கொலை செய்யணும்?? இதில் அதிகம் படித்தவர்கள் கூட கொலை செய்வது வெட்கப்பட வேண்டிய விஷயம்.

போதை
சிறு வயதில் எங்கோ படித்த ஞாபகம் மது மற்ற குற்றத்திற்கு வழி வகுக்கும் என்று
கொலை செய்யவோ, குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யவோ மற்ற குற்றங்கள் செய்யவோ தைரியம் கொடுப்பது போதையாகத்தான் இருக்க முடியும்.
குடியால் தன் குடும்பத்தையும் கெடுத்து மற்றவர் குடும்பத்தையும் கெடுத்தவர்கள் பல பேர்.
குடி குடியை கெடுக்கும் என்று எழுதி வைத்த அரசு வருமானத்திற்கு ஆசை பட்டு குடியை ஊக்குவிப்பது கொடுமையிலும் கொடுமை.

பணத்தாசை
இதை ஆசை என்பதைவிட பணப்பித்து என்று தான் சொல்ல வேண்டும்.
உழைத்து சாப்பிடாமல் மற்றவரை ஏமாற்றி சாப்பிட்டு உடம்பை வளர்க்க அனைத்தையும் அனுபவிக்க திருடுகிறார்கள், குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கிறார்கள், பணம் சம்பாதிக்க உழைக்கலாமே ஏன் மற்றவரை ஏமாற்ற வேண்டும். இதுவும் பல பேரை கொலை செய்ய துண்டியிருக்கிறது
பணம் மட்டுமே வாழ்க்கை அல்லவே ஏன் இது பல பேருக்கு புரிவதில்லை.


இவை அனைத்துக்கும் காரணம் மக்களிடையே மனித நேயமின்மை, சுயநலம்,
மற்றவருக்கு பிரச்சனை என்றால் அது சாதாரண செய்திதான் தனக்கு வரும் வரை அது பெரிய பிரச்சனை இல்லை.
வெறும் வேலைக்கு போக மட்டும் சொல்லித்தரும் பள்ளிகள் இனிமேல் அன்பு பாசம் மனித நேயம் இவற்றையும் சொல்லித்தந்தால் வரும் காலம் நன்றாக இருக்கும்.
குழந்தைகள் வன்கொடுமையிலிருந்து காப்பாற்ற அரசு ஏதாவது செய்ய வேண்டும், குறைந்தபட்சம் மது விளக்கு கொண்டு வந்தாலாவது பரவாயில்லை.
இவை அனைத்தையும் பார்த்துகொண்டு நாம் இன்னும் கையாலகதவர்களத்தானே இருக்கிறோம்
இப்படி இந்தியா தடுமாறி வருகிறது, தீவிரவாதத்திற்கு எதிராக போர் தொடுபதற்க்கு முன் இவற்றிற்கு எதிராக போர் தொடுப்போம் வாரீர் தோழர்களே........
Title: Re: தடுமாறும் இந்தியா - போர் தொடுப்போம் வாரீர்
Post by: Yousuf on October 14, 2011, 11:08:19 AM
Quote
இவை அனைத்துக்கும் காரணம் மக்களிடையே மனித நேயமின்மை, சுயநலம்,
மற்றவருக்கு பிரச்சனை என்றால் அது சாதாரண செய்திதான் தனக்கு வரும் வரை அது பெரிய பிரச்சனை இல்லை.
வெறும் வேலைக்கு போக மட்டும் சொல்லித்தரும் பள்ளிகள் இனிமேல் அன்பு பாசம் மனித நேயம் இவற்றையும் சொல்லித்தந்தால் வரும் காலம் நன்றாக இருக்கும்.
குழந்தைகள் வன்கொடுமையிலிருந்து காப்பாற்ற அரசு ஏதாவது செய்ய வேண்டும், குறைந்தபட்சம் மது விளக்கு கொண்டு வந்தாலாவது பரவாயில்லை.

இந்த குற்றங்களை அதிகம் செய்வது படித்த முட்டாள்கள் தான். நீங்கள் கூறியது போல் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வேலைக்கான படங்களை சொல்லி தருவதோடு தனிமனித ஒழுக்கத்தையும் கற்பித்தல் எதிர்கால சமுதாயம் சிறந்த சமுதாயமாக விளங்க முடியும்.

இதில் வேதனை என்ன வென்றால் ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய ஆசிரியர்கள் ஒரு சிலரிடம் தனிமனித ஒழுக்கமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் ஒரு சிலரை பெரும்பான்மையானவர்கள் என்றும் கூறுவது சிறந்தது. ஒரு சில ஆசிரியர்கள் தான் மாணவர்களுக்கு நல்லதை போதிக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். இந்த நிலை மாற வேண்டும்.

மேலும் இப்படி பட்ட குற்றங்கள் அதிகரிக்காமல் தடுக்க கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்படவேண்டும். அந்த தண்டனைகளை மக்களின் முன்னாள் பகிரங்கமாக கொடுக்க வேண்டும் அப்பொழுது தான் குற்றங்கள் செய்ய மற்றவர்கள் தயங்குவார்கள்.

சிறந்த இந்தியாவை உருவாக்குவதை விட சிறந்த உலகத்தை உருவாக்க முயற்சி செய்வோம்.

தேசங்கள் கடந்து எல்லா மனிதர்களையும் நேசிப்போம்...!!!
Title: Re: தடுமாறும் இந்தியா - போர் தொடுப்போம் வாரீர்
Post by: Global Angel on October 18, 2011, 05:47:13 PM
nalla pathivuthaan.... nremo unmayaana kaathalkalum irukkathaan seikinran.... engayo yaro oruthi kolaiseithathukaaga kaathal ellam verum kaamam maddumenru solvathu enaal etru kollapada mudiyatha karuththu ;)
Title: Re: தடுமாறும் இந்தியா - போர் தொடுப்போம் வாரீர்
Post by: RemO on October 18, 2011, 07:51:01 PM
Madam konjam nala padinga nan inga kathala pathi ethum solala
kalla kaathal pathi than soliruken
Title: Re: தடுமாறும் இந்தியா - போர் தொடுப்போம் வாரீர்
Post by: தாமரை on October 18, 2011, 08:03:06 PM
ரெமோ  நீக சொல்லுறது 100 % உண்மை.  இதையெல்லாம் எங்கே பள்ளிகுடம் கற்று தர போகிறது அதுக்கு எப்பிடி எல்லாம் காசு வாங்கலாம்  என்று சிந்திக்கவே அதற்க்கு நேரம் போதாது  :'( :'( :'(
Title: Re: தடுமாறும் இந்தியா - போர் தொடுப்போம் வாரீர்
Post by: RemO on October 18, 2011, 08:50:34 PM
நீங்கள் சொல்வது சரி தான் தாமரை
கல்வி சேவையாக இல்லாமல் நல்ல தொழிலாக மாறியது கூட இதற்கு காரணம் தான்