FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: kanmani on April 02, 2013, 11:23:34 PM

Title: ஆல்கஹால் குடித்தால் கருச்சிதைவு ஏற்படுமா?
Post by: kanmani on April 02, 2013, 11:23:34 PM
ஆல்கஹாலை அளவாக குடித்தால், இதய நோய், இரத்த அழுத்தம் போன்றவை வராமல் இருக்கும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் அதே சமயம் அதனை கர்ப்பமாக இருக்கும் போதோ அல்லது கர்ப்பத்திற்கு முயற்சிக்கும் போதோ சாப்பிட்டால், கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளது. எனவே தான், கர்ப்பிணிகள் மற்றும் கர்ப்பத்திற்கு முயற்சிப்போரிடம், ஆல்கஹால் பருக வேண்டாம் என்று கூறுகின்றனர். சிலர் ஆல்கஹால் எப்படி குழந்தையின் வளர்ச்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கேட்கலாம்.

        தற்போது ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களாலேயே கருச்சிதைவு ஏற்படுகிறது. அவற்றில் ஒன்றான ஆல்கஹால் குடித்தால் ஏற்படாத என்ன? ஆகவே குழந்தை நன்கு ஆரோக்கியமாக வளர வேண்டும் என்று நினைப்பவர்கள், கர்ப்பத்தின் போது ஆல்கஹால் பருகாமல் இருக்க வேண்டும். அதற்கான காரணத்தை உங்களுக்காக கூறியுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, பின் முடிவெடுங்கள்.

* ஆய்வுகள் பலவற்றில் 4-5 டம்ளர் ஆல்கஹால் குடித்தால், முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவ்வாறு முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவை ஏற்படுத்தாவிட்டாலும், வயிற்றில் உள்ள கருவிற்கு எந்நேரத்திலும் ஆபத்தை ஏற்படுத்தும்.

* பொதுவாக கருச்சிதைவு ஏற்படுவதற்கு கருமுட்டையில் உள்ள சைட்டோபிளாசத்தில் ஏதாவது மாற்றம் ஏற்படுவதே ஆகும். ஏனெனில் சைட்டோபிளாசம் கருமுட்டையை பாதுகாக்கும் ஒரு படலம். அத்தகைய படலத்தில் ஆல்கஹால் படும்போது, அதில் உள்ள அமிலமானது படலஙத்தில் இடையூறு உண்டாக்கி, பின் அவை இறுதியில் கருச்சிதைவிற்கு வழிவகுக்கிறது.

* ஆல்கஹால் குடித்தால், கருச்சிதைவு ஏற்படாவிட்டாலும், அவை குழந்தையின் வளர்ச்சி, மனநிலை பாதிப்பு, நடத்தையில் பிரச்சனை, முகம் சார்ந்த குறைபாடுகள், நரம்பு செயலிழப்பு போன்றவை ஏற்படும். அதுமட்டுமின்றி, சில நேரங்களில் கர்ப்பிணிகளுக்கே இதயம், நரம்பு மண்டலத்தில் பிரச்சனை, அதிகப்படியாக உடல் எடை அதிகரித்தல் போன்றவையும் ஏற்படும்.

* ஆல்கஹால் பருகினால், அவை இனப்பெருக்க மண்டலத்திற்கே பெரும் பாதிப்பை உண்டாக்கும். ஒருவேளை அளவுக்கு அதிகமாக குடித்தால், கருச்சிதைவு ஏற்பட்டு, பின் எப்போதுமே கர்ப்பம் தரிப்பதற்கு முடியாமல் போய்விடும். ஏனெனில் அதிகப்படியான ஆல்கஹால் கருமுட்டைகளுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கி, பின் கருப்பை செயல்படாமல் செய்துவிடும். அவ்வாறு கருப்பை பிரச்சனை உள்ளதென்றால், முறையற்ற மாதவிடாய் சுழற்சி மற்றும் கர்ப்பம் தரிப்பது தாமதமாதல் அறிகுறியாகும்.

* நிறைய கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் குடித்தால் தான் கருச்சிதைவு ஏற்படும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவ நிலைகளில் பருகினால், கருச்சிதைவு ஏற்படாது என்று நினைக்கின்றனர். அது உண்மை தான். ஆனால் கருச்சிதைவிற்கு பதிலாக, குழந்தையின் வளர்ச்சி மற்றும் வேறு சிலவற்றில் குழந்தைக்கு பிரச்சனை அதிகம் ஏற்படும்.

எனவே இவற்றை மனதில் கொண்டு, கர்ப்பிணிகள் மற்றும் கர்ப்பம் தரிப்பதற்கு ஆசைப்படும் பெண்கள், ஆல்கஹால் அருந்தலாமா? வேண்டாமா? என்று முடிவெடுங்கள்.