FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on April 02, 2013, 04:13:24 AM

Title: காத்திருப்பு
Post by: Global Angel on April 02, 2013, 04:13:24 AM
கருநீல  வானின்
நீண்ட விரிப்புக்குள்
விதைக்கபட்ட விண்மீன்கள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
தம் இருப்பினை காண்பிக்க
ஒளிந்து ஒளிர்ந்தவண்ணம் இருந்தது ...

மேக திரள் விலக்கி
மோக முட்களை அனுப்பும்
காம பிரம்மன்
கதிர் அலர்ந்தவனை காணோம் ...

தேக துகள் நுழைந்து
பாகத் தானைக்குள்
போகத்தேனை சுரக்கும்
மெல்லிய தென்றல்
மெல்லிடை தொடும்
நாணக் குடை விரிந்து
வானை அது மறைக்கும் ...

வான் காணா பிறை ஒன்றை
தான் காண விரல் கீறும்
பால் ஊறும் செவ்வாயும்
பல் பதிந்து சொல் குழறும்
வெம்பி தணியும்
கொங்கை குடை நிலத்தில்
தொங்கும் சங்கொன்று தாளம் போடும்

எங்கே எனும் கேள்விக்கு
இங்கே என்று இருப்பினை காட்ட
தடதடக்கும் இதய தாளம்
காதலில் தனிமை இனிமை
மோகம் புதுமை
மேகம் கவிதை
நிலவில் இருளும் இனிமை
பிரிவும் இன்னிமை

இன்னும் காணவில்லை
இருள் கிழிக்கும் என்னவன் ...
Title: Re: காத்திருப்பு
Post by: sasikumarkpm on April 02, 2013, 06:29:36 PM
கவிதைகளுக்கேற்றாற் போல் எதுகை மோனைகளா, இல்லை எதுகை மோனைகளுக்கு ஏற்றாற் போல் கவிதையா??? குழம்பித்தான் போனேன் ஒரு கணம்.. :) வரிகள் அபாரம்.. :) கலக்குறீங்க global angel.. :)
Title: Re: காத்திருப்பு
Post by: User on April 02, 2013, 08:36:28 PM
mayiluku jimikki vaanga ponen..adhukulla ivlo neelamaa eludhiteengalaa? jokes apart..

aangal vekka padum tharunam & un angam tamilodu sondham..adhu entrum thikattaadha sandham indha irandu songs lyrics thaan niyabaagam varudhu..sasi sonnadhum unmai thaan..edhugai,monai angel ku kai vandha kalai thaan..
Quote
பாகத் தானைக்குள்
போகத்தேனை
Quote
காதலில்
தனிமை இனிமை
மோகம் புதுமை
மேகம் கவிதை
indha irandu idamum inba then vandhu paayudhu kaadhinile..vaalthukkal..ungal kavithaich solaiyil vaarthaikalai thiridum vandugalil naanum..
Title: Re: காத்திருப்பு
Post by: Global Angel on April 02, 2013, 08:55:20 PM
nandrikal sasikumar .... rompa kulambeetingaaa :D


user erkanave jimikki potta mayiluthaane :D nenga x rava oru jimikki enakku vanga ponengalaa .. ? rompa paasamthaan ponga :D

nandrikal  naanum filmku song elutha poren therinchavanga irunthaa sibarsu panungappa :D
Title: Re: காத்திருப்பு
Post by: ஆதி on April 02, 2013, 10:33:41 PM
//கருநீல  வானின்
நீண்ட விரிப்புக்குள்
விதைக்கபட்ட விண்மீன்கள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
தம் இருப்பினை காண்பிக்க
ஒளிந்து ஒளிர்ந்தவண்ணம் இருந்தது ...//

அங்கொன்றும் இங்கொன்றுமாய் தெரியும் விண்மீன்கள் தனிமையின் குறியீடுகளாகி, அழுத்தமாய் தனிமையின் வெற்றுத்தன்மையை பதிவு செய்திருக்கிறது

//மேக திரள் விலக்கி
மோக முட்களை அனுப்பும்
காம பிரம்மன்
கதிர் அலர்ந்தவனை காணோம் ...//

காம பிரம்மன் அழகிய சொல்லாடல்

காமபிரான் என்று கூட சொல்லலாம் இல்லையா அவனை

நிலவற்ற வானுக்கான படிபம் சிறப்பு

//தேக துகள் நுழைந்து
பாகத் தானைக்குள்
போகத்தேனை சுரக்கும்
மெல்லிய தென்றல்
மெல்லிடை தொடும்
நாணக் குடை விரிந்து
வானை அது மறைக்கும் ...//

இந்த பத்தி சற்று நிதானமாய் கடக்க வேண்டியிருக்கிறது

தேக துகள், பாக தானைகள்

சடக்கென கவனத்தை ஈர்க்கிறது

தேகத் துகள் = செல்கள்

பாகத்தானை = பெண்ணின் ஒவ்வொரு அங்கமும் ஒரு படை உண்மைதான்

தென்றலின் தொடுகையும் நாணமும் மூடும் இமையும் கண்முன் விரிகிறது

//வான் காணா பிறை ஒன்றை
தான் காண விரல் கீறும்
பால் ஊறும் செவ்வாயும்
பல் பதிந்து சொல் குழறும்
வெம்பி தணியும்
கொங்கை குடை நிலத்தில்
தொங்கும் சங்கொன்று தாளம் போடும்//

வான் காணா பிறை, தான் காண விரல் கீறல் மிக அற்புதமான படிமம்

மோக மிதம் மிஞ்ச நிலைகுலைவையும், அலையும் மார்ப்பை குடையென வர்ணித்தமையும் சிறப்பு

//எங்கே எனும் கேள்விக்கு
இங்கே என்று இருப்பினை காட்ட
தடதடக்கும் இதய தாளம்
காதலில் தனிமை இனிமை
மோகம் புதுமை
மேகம் கவிதை
நிலவில் இருளும் இனிமை
பிரிவும் இனிமை//

மேகம் கவிதை இந்த வரி எனக்கொரு படிமமாகவே தெரிகிறது

மேகம் நாணத்தை படிமமாய் காண்கிறேன்

இருளில் மேகம் தெரியாது, மேகம் அழகு நிலா வழியும் போது, நிலா முகம் மறையும் மேகம் நாணம்

நாணம் கவிதைத்தான்,  பெண்களுக்கான உடல்மொழியே கவிதைத்தானே

//இன்னும் காணவில்லை
இருள் கிழிக்கும் என்னவன் ...//

ஒரு நிலவிற்கான காத்திருப்பாகவும், ஒரு நிலவனுக்கான காத்திருப்பாகவும் இரு தொனியில் கவிதை முடிகிறது

இரு தொனி பிடிபட்டப் போது மீண்டும் கவிதையை முதலிலிருந்து ஒருமுறை வாசிக்க தோன்றியது

மிக சிறப்பான கவிதைங்க பாராட்டுக்கள்
Title: Re: காத்திருப்பு
Post by: Global Angel on April 02, 2013, 10:42:25 PM
என்னடா இன்னும் காணோமேன்னு பார்த்தேன் ... நன்றிகள் ஆதி என் கவிதையவிட உங்கள் பின்னூட்டம்  ரெம்ப்ப பிக்கூஊஊஊஊஉ
Title: Re: காத்திருப்பு
Post by: PiNkY on April 06, 2013, 05:37:20 PM
global ungalaala matum epdi love uh pathi correct uh feel oda elutha mudiyuthu.. avlo experience oh.. nice kavidai yaar... ungal rasigai..