-
மனிதர்களுக்கு மரணம் ஏற்படக்கூடிய முக்கிய காரணங்களில் ஒன்றாக புற்று நோய் உள்ளது. இந்நோயானது உடலில் உள்ள அணுக்கள் பிரிந்து பின் கட்டுப்பாடின்றி வளர்ந்து ஒரு கட்டியை ஏற்படுத்துகிறது. பின் அந்த கட்டியானது கடுமையாக ஒரு இடத்தை அரித்து, உயிருக்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணங்கள் பலதரப்பட்டதாக இருக்க முடியும். ஆனால் இந்த நோய் பெரும்பாலும் ஒரு ஆரோக்கியமற்ற வாழ்க்கை வாழ்வதால் ஏற்படுகிறது. புற்றுநோயை தடுக்க உதவும் பல்வேறு இயற்கை வழிகளை பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு கீழே படித்து தெரிந்து கொள்ளவும்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F03%2F29-1364536528-broccoli.jpg&hash=906a326cd66e2f4dc62327a18e5cbf0dadbe0c99)
ப்ராக்கோலி
புற்றுநோயை திறம்பட தடுக்க உதவும் மிகச்சிறந்த உணவுப் பொருட்களில் ப்ரோக்கோலி ஒன்றாகும். எனினும் ப்ரோக்கோலியை மைக்ரோவேவ் ஒவனில் சமைப்பது பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனெனில் புற்றுநோயை எதிர்க்ககூடிய ப்ளேவோனாய்டுகள் மைக்ரோவேவினால் அழிக்கப்படுகிறது. ப்ரோக்கோலியை கொதிக்க வைத்தோ அல்லது அப்படியே சிற்றுண்டியாக சாப்பிடுவது சிறந்தது.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F03%2F29-1364536546-garlic.jpg&hash=1bc3bb8d49e77f9784102e8e50b4decb35e518a5)
பூண்டு
பூண்டிற்கு மிகவும் சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்ற பண்புகள் உண்டு. இது நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்தி புற்றுநோயை தடுக்க உதவுகிறது. பல்வேறு ஆய்வுகள் பூண்டு சாப்பிட்டால், அதிவேகமாக வயிற்று புற்றுநோய் முரண்பாடுகளை குறைக்கலாம் என்று காட்டுகின்றன.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F03%2F29-1364536614-exercise.jpg&hash=eaee09a5f0c20859686d102a8f79e7b5877e7a70)
உடற்பயிற்சி
உடற்பயிற்சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்பெற செய்து உடலில் இரசாயன, என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F03%2F29-1364536634-sleep.jpg&hash=6171901a4aef95d72dfdd148f273d1b28fe2829e)
தூக்கம்
மனித உடலின் செயல்பாடுகளை முறையாக கட்டுப்படுத்துவதற்கு குறைந்தபட்சம் 8 மணி நேர தூக்கம் அவசியமாகும். முறையான தூக்கம் ஆரோக்கியமான நாளமில்லா சுரப்பி மண்டலத்தை பராமரிப்பதற்கும் மற்றும் புற்றுநோயை எதிர்த்து போராடும் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. ஆரோக்கியமான நாளமில்லா சுரப்பியை ஊக்குவிக்க முழு இருட்டில் தூங்குவது அவசியம்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F03%2F29-1364536680-cigarette.jpg&hash=a96da2869ee7fcd2c786ebc51c3975c2fcd42d01)
புற்றுநோய் காரணிகள்
புற்றுநோயை தடுக்க, கண்டிப்பாக புற்றுநோய் ஏற்படுத்தும் அனைத்து விஷயங்களையும் தவிர்க்க வேண்டும் என்று மிகவும் தெளிவாக தெரிகிறது. மது, சிகரெட் மற்றும் பிற பொழுதுபோக்கு போதை மருந்துகள் புற்றுநோய் வருவதற்கான அதி முக்கிய காரணங்களாக இருக்கின்றன. எனவே இவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F03%2F29-1364536705-processedfoods.jpg&hash=16f9cdfd1ec461eeb381c7388afd2d94239b230d)
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பல ஆய்வு முடிவுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை, புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்க முடியும் என்று காட்டியுள்ளன. அனைத்து ஊட்டச்சத்துகள் மற்றும் துணை உணவுகள் கொண்ட ஒரு ஆரோக்கியமான உணவு பழக்கமானது, புற்று நோயை எதிர்த்து போராடுவதில் முதல் படியாக இருக்கிறது.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F03%2F29-1364536723-redwine.jpg&hash=6e8be4b896391f12dc8d6e83c6725127e5bfc3b5)
ரெட் ஒயின்
ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடைய ரெட் ஒயின், ரெஸ்வெரடால் மற்றும் பிற பைத்தோ கெமிக்கல்களை கொண்டிருக்கும் திராட்சை பழ தோலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஒரு நாள் ஒரு கோப்பை ஒயின் குடிப்பது இரத்த புற்றுநோய், தோல் மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற பரவலான புற்றுநோய்களை தடுக்க உதவும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F03%2F29-1364536766-mobile.jpg&hash=02441c634e4e0f3f8cc4cc2b1d8693e23210351c)
தொடர்பு சாதனங்கள் புற்றுநோய் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் காரணிகள் பல்வேறு உள்ளன. மொபைல் தொலைபேசிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு புற்றுநோய் வாய்ப்பை அதிகரிக்க முடியும். புற்று நோயை தவிர்ப்பதற்கு இக்காரணிகளோடு இடைபடுவதை குறைத்துக் கொள்ளவும்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F03%2F29-1364536785-darkchocolate.jpg&hash=7117a5af09ac3cc4a019bccc62c3fd788210b170)
டார்க் சாக்லெட்
கொக்கோவில் உள்ள பெண்டாமெர் போன்ற ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை எதிர்த்து போராடும் பண்புகளை பெற்றுள்ளன. டார்க் சாக்லேட்டில் கொக்கோ அதிகம் உள்ளது. ஆகவே நிச்சயமாக புற்றுநோயில் இருந்து விலகி இருக்க உதவும் மிக ருசியான வழிகளில் இது ஒன்றாகும்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F03%2F29-1364536880-egg.jpg&hash=a211dc9bd2f5d4c722f74be2dcf392e8fada3fe2)
ஊட்டச்சத்துக்கள்
வைட்டமின் டி-யோடு கால்சியத்தையும் சேர்த்து கொள்ளவும். டார்மௌத் மருத்துவ பள்ளி ஆய்வின் படி, இந்த ஊட்டசத்துகள் வளரும் தலைமுறையினருக்கு காலன் புற்று நோயை தடுப்பதில் முக்கிய பங்காற்றுவதாக தெரிய வந்துள்ளது. இத்தகைய சத்துக்கள் முட்டையில் அதிகம் உள்ளது.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F03%2F29-1364536923-water.jpg&hash=3bff68701cf6222812f7723799157a2a99658212)
தண்ணீர்
கழிவறைக்கு செல்வதற்கு முன் ஒவ்வொரு முறையும், சமையலறைக்கோ அல்லது தண்ணீர் குளிர்விப்பானுக்கு சென்று ஒரு கோப்பை தண்ணீர் குடிக்கவும். 1996 ஆம் ஆண்டில், புதிய இங்கிலாந்து மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு முக்கிய ஆய்வின் படி, ஒவ்வொரு நாளும் 8 அவுன்ஸ் கோப்பையில் ஆறு முறை தண்ணீர் குடித்து வரும் ஆண்களுக்கு, நீர்ப்பை பகுதி புற்றுநோயின் ஆபத்து பாதியளவு குறைத்துள்ளன என்று கண்டறியப்பட்டது. மற்றொரு ஆய்வானது பெருங்குடல் புற்றுநோயோடு தொடர்புடைய பெண்கள் தண்ணீர் அருந்துவதை பற்றியது. அதிக அளவு தண்ணீர் குடிக்கும் பெண்கள், தங்களுக்கான ஆபத்தில் இருந்து 45 சதவீதம் வரை குறைத்து கொண்டுள்ளனர்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F03%2F29-1364536945-greentea.jpg&hash=f1263963dbda4c9aa9e015192b8bb6b07089947f)
டீ
டீ குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும். ஆயிரக்கணக்கான வருடங்களாக க்ரீன் டீ குடிப்பதினால் ஏற்படும் பலன்கள் ஆசியாவில் உணரப்பட்டு வந்துள்ளன. மேற்கத்திய நாடுகளில் நடைபெற்ற ஒரு ஆராய்ச்சி முடிவின் படி, க்ரீன் டீ பல புற்றுநோய்களை சரி செய்வது மட்டுமல்ல, இதய நோயை கூட கட்டுபடுத்தும் என்று தெரிய வந்துள்ளது. சில விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியின் படி, க்ரீன் டீயில் உள்ள EGCG என்ற ஒரு இரசாயனம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிக சக்தி வாய்ந்த புற்றுநோய்க்கெதிரான கலவைகளில் ஒன்றாகும்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F03%2F29-1364536969-beer.jpg&hash=856f6e07a6403f11e0cdabc6cd9b03d89a60babe)
பீர்
இரவு ஒரு பீர் குடிக்கவும். பீர் வயிற்று புண்களை ஏற்படுத்தி சாத்தியமான வயிற்று புற்றுநோய் ஏற்படுத்தும் பாக்டீரியம் ஹெலிகோபாக்டர்க்கு எதிராக வயிற்றை பாதுகாக்கிறது. ஆனால் அதிகப்படியாக குடிக்க வேண்டாம். ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட ஆல்கஹால் பானங்கள் தினமும் குடிப்பது வாய், தொண்டை, உணவுக்குழாய், கல்லீரல், மற்றும் மார்பக புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F03%2F29-1364536998-salmon.jpg&hash=66a23f76f0f8824bbf43f2989463efcbcf06d9e5)
சால்மன்
கனடாவை பற்றி படிக்கும் (கோ பிகர்) ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள், வாரத்திற்கு நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட முறை, மீன் சாப்பிட்டவர்கள் கிட்டத்தட்ட இரத்த புற்றுநோய், லுகேமியா, சாற்றுப்புற்று, மற்றும் ஹோட்கின் லிம்போமா புற்றுநோய் உருவாவதில் மூன்றில் ஒரு வாய்ப்பு குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. பிற ஆய்வுகள் மீன்களில் சால்மன், கானாங்கெளுத்தி, பொத்தல், மத்தி, மற்றும் சூரை, அத்துடன் இறால் மற்றும் சிப்பி போன்றவற்றை சாப்பிடும் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் ஆபத்து குறைவாக இருக்கும் என்றும் கண்டறியப்பட்டது.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F03%2F29-1364537015-vitamind.jpg&hash=233b67b1853838e591aa738f736e5077883c4dfe)
வைட்டமின் டி
ஒவ்வொரு நாளும் தோல் மீது சூரிய ஒளி சுமார் 15 நிமிடங்கள் கிடைக்குமாறு பார்த்து கொள்ளவும். வைட்டமின் D குறைவாக உள்ளதா? ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளபடி உடலில் வைட்டமின் டி மிக குறைவாக காணப்பட்டால் மார்பக, குடல், விரை, கருப்பை, மற்றும் வயிறு புற்றுநோய்கள், அத்துடன் ஆஸ்டியோபோரோசிஸ், நீரிழிவு, மரப்பு, மற்றும் உயர் இரத்த அழுத்தம் உட்பட, பல புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F03%2F29-1364537090-oliveoil.jpg&hash=f25df98e5c872161dd141b87c3b3a391dec70a14)
புரதம்
யேல் பல்கலைகழக ஆய்வின் படி அதிக விலங்கு புரதத்தை சாப்பிடக்கூடிய பெண்களுக்கு, ஹோட்கின் லிம்போமா புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு 70 சதவீதமும், தெவிட்டிய கொழுப்பு அதிக சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படக்கூடிய ஆபத்து 90 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, குறைந்த கொழுப்பு அல்லது கொழுப்பற்ற பால் மற்றும் மாட்டிறைச்சி அல்லது பன்றியிறைச்சிக்கு பதிலாக, கோழி அல்லது மீன் எடுத்து கொள்வது நல்லது. மேலும் வெண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F03%2F29-1364537108-walking.jpg&hash=4c30f85427ec357bf93a8f6af3bad3767c5a1ee4)
நடைபயிற்சி
இரவு உணவிற்கு பிறகு ஒவ்வொரு மாலையில் ஒரு 30 நிமிட நடைபயிற்சி எடுத்து கொள்ளவும். சியாட்டிலில் உள்ள பிரெட் ஹட்சின்சன் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின் படி, இது மார்பக புற்றுநோய் ஆபத்தை குறைக்க வாய்ப்பிருக்கிறது. மிதமான உடற்பயிற்சி மார்பக புற்றுநோய் ஏற்பட காரணமான ஈஸ்ட்ரோஜென் என்ற ஒரு ஹார்மோன் அளவை குறைக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு ஆய்வில், வாரத்திற்கு நான்கு மணி நேரம் நடை பயிற்சி மேற்கொண்ட பெண்களுக்கு, கணைய புற்றுநோய் ஏற்படும் ஆபத்து பாதியாக குறைந்தது. உடற்பயிற்சியின் நன்மைகள் மேம்படுத்தப்பட்ட இன்சுலின் வளர்ச்சிதை மாற்றத்தோடு தொடர்புடையது.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F03%2F29-1364537126-organicfoods.jpg&hash=3187ff279350d849bab457fea55db23fef9d572f)
ஆர்கானிக் உணவுகள்
ஆர்கானிக் உணவுகள் வாங்கவும். ஹார்மோன்கள் மற்றும் பூச்சி கொல்லி சேர்க்காமல் வளர்ந்த உணவுகள் இவை. இவைகள் இரண்டும் செல்களை பாதித்து புற்று நோய் ஏற்பட காரணமாகின்றன.