FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: sasikumarkpm on March 30, 2013, 12:46:59 AM

Title: பத்து ரூபாய்..
Post by: sasikumarkpm on March 30, 2013, 12:46:59 AM
இளம்பெண் கைபுக புதுவெட்கம் கொண்டேன்,
   உழைப்பாளிக்கு உணவாய் மேல்தகுதி கண்டேன்,

நித்தம் பலதேசம் கண்டு பரதேசியானேன்,
   இரண்டொருதரம் லஞ்சமாகியும் வெட்கிப்போனேன்,

திருநாளில் அர்ச்சகரின் கரம் புகுந்தேன்,
   மறுநாளில் மதுக்கடையில் மாய்ந்து போனேன்,

கல்விக்கும் கலவிக்கும் சமமாய் சென்றேன்,
   பலரின் மோகம் தீர்த்து நவீன வேசியானேன்,

ஒருதடவை சாலையோரம் தொலைக்கப்பட்டேன்,
   மறுதடவை "ஆயிரங்களுக்கிடையே" சொர்கம் கண்டேன்,

சில்லரை சகோதரர்களுகு மாற்றாய் போனேன்,
   சிலநேரம் எனை நினைந்த்து வேதனைப்பட்டேன்,

பாகுபாடின்றி பலர்கைபட்டு புத்தனானேன்,
   பகுத்தறியாத மனம்கொண்டு பித்தனானேன்,

இறுதியில் எனைக்கிழித்து நகை கொண்ட
   மழலையின் எச்சில் அருந்த தேவனானேன்!!!!!!
Title: Re: பத்து ரூபாய்..
Post by: Global Angel on March 30, 2013, 01:38:40 AM
பத்து ரூபா <<< இதுக்கு இன்னமும் இவ்ளோ மரியாதை இருக்கேன்றது உங்க கவிதைலதான் படித்து தெரிஞ்சு கொண்டேன் ... ஹஹஹ்  பணதுக்குள்ள மதிப்பு மரியாதை பற்றி அழகான கவிதை ... நன்று
Title: Re: பத்து ரூபாய்..
Post by: User on March 30, 2013, 08:00:19 PM
perundhukalai vida indha roopaa nottugal adhigamaa thaan payanam seiyudhu..adhu pora thisaiyalaam payanithu,adhu solluvadhu polave vadivamaitha vidham nantru..vaalthukkal..thodarattum ungal kavipayanam
Title: Re: பத்து ரூபாய்..
Post by: Varun on March 30, 2013, 10:04:09 PM
sasi pathu rubai kudetha kavithai solre nee
Title: Re: பத்து ரூபாய்..
Post by: sasikumarkpm on March 31, 2013, 12:26:54 PM
நன்றி பயனரே.. :) வருண் சரியா புரியல மறுக்கா சொல்லுங்க.. :D
Title: Re: பத்து ரூபாய்..
Post by: ammu on April 01, 2013, 06:32:44 PM
அருமையான  படைப்பு  நண்பரே 
வாழ்த்துகள் 
Title: Re: பத்து ரூபாய்..
Post by: ஆதி on April 01, 2013, 07:36:02 PM
கவிதை நன்று சசிக்குமார்

இந்த இருவரிகள் மட்டும் எனக்கு புரியவில்லை, விளக்க முடியுமா ?

//நித்தம் பலதேசம் கண்டு பரதேசியானேன்//

//பாகுபாடின்றி பலர்கைபட்டு புத்தனானேன்//


Title: Re: பத்து ரூபாய்..
Post by: sasikumarkpm on April 01, 2013, 08:16:25 PM
பல ஊர் சுற்றும் மனிதனுக்கு பட்டறிவு மிகுவதால் அவனை மெய்ஞானி(பரதேசி) என்பர்.. அதனை பல ஊர்கடக்கும் காசுக்கும் பொருத்திப்பார்க்கும் சிறு எண்ணம் மேலிட முதல் வரி.. பலர் கைபடும் ஒரு பொருள் இரும்பாயினும் நாளிடைவில் தேய்ந்து(முதிர்ச்சியடைந்து) போகும்.. இரும்புக்கே இம்மாத்திரமெனில் கசங்கி பக்குவ நிலைஅடையும் காகிதத்தினை புத்தன் என குறிப்பிடுவது மிகையாகாது என்றே எண்ணி இரண்டாம் வரி..
Title: Re: பத்து ரூபாய்..
Post by: ஆதி on April 01, 2013, 08:44:45 PM
தேசம் என்பது நாடுகளைத்தானே குறிக்கும், வேறு தேசத்தில் பத்து ரூபாய் தன் மதிப்பை இழந்தே இருக்கும் இல்லையா ?

புத்தனும் மெய்ஞானித்தானே சசி ?



Title: Re: பத்து ரூபாய்..
Post by: sasikumarkpm on April 01, 2013, 08:54:44 PM
தேசாந்திரி என்பவன்  வடநாடுகள்(காசி, அயோத்தி முதலாய்), தென்நாடுகள் (காஞ்சி) வரயிலாய் சுற்றிய ஒருவனை குறிப்பதாகுமல்லவா??? இவை அனைத்தும் ஒர் தேசத்தில் தாமே அடங்குகின்றன???
Title: Re: பத்து ரூபாய்..
Post by: ஆதி on April 01, 2013, 09:13:10 PM
தேசாந்திரி என்பது ஒரு தேசம் முழுக்க சுற்றி அலைபவை குறிக்கும் சசிக்குமார்

//நித்தம் பலதேசம் கண்டு பரதேசியானேன்//

நீங்கள் பல தேசம் என்று சொல்லியிருக்குறீர்களே, அதனால்தான் விவாவதமே :)
Title: Re: பத்து ரூபாய்..
Post by: sasikumarkpm on April 01, 2013, 10:12:40 PM
தேசம் என்பது நாடுகளைத்தானே குறிக்கும்,????? இந்தியாவை வடநாடு தென்நாடு என இரண்டாய் பிரித்து பேசுவது வழக்கம் தானே???? :) தவிர வேறுதேசத்தில் பத்து ரூபாய் மதிப்பிழக்காது.. மாற்றல் மட்டுமே செய்யப்படும்.. சரிதானே ஆதி???:)
Title: Re: பத்து ரூபாய்..
Post by: ஆதி on April 01, 2013, 10:55:51 PM
அப்போ காந்தி எந்த நாட்டின் தேசப்பிதா சசிக்குமார் ?

வட நாடு தென்னாடு சொன்னது இந்தியானு ஒரு நாடு இல்லாத அப்போது சசிகுமார் அப்போது பத்து ரூபாயுமில்லை

தென்னாடுடைய சிவானே போற்றி !!!!

வடமாநிலம் தென்மாநிலம் என்றுத்தான் பேசுகிறோம்

மாநிலம் வேறு நாடு வேறு இல்லையா ?

தேசம் என்பது நாடென்று சொன்னதாவது தேசமென்பது வடமொழிச் சொல் என்பதன் பொருட்டே

தேசத்தின் தமிழீடே நாடு

தேசாந்திரி என்பதனை நாடாந்திரி என்றனர் அதுவே நாதாரி என்று வழக்கு மொழியில் விரவிற்று

Title: Re: பத்து ரூபாய்..
Post by: sasikumarkpm on April 02, 2013, 12:30:36 AM
காலத்திற்கு தகுந்தாற்போல் வட்டாரங்களை குறிப்பிடும் சொற்கள் மாறத்தான் செய்கின்றன ஆதி.. இன்று நானிருப்பது தமிழ்"நாடு".. என்னை பொருத்தவரை ஒரே நாட்டிலிருந்தும் பக்கத்து மாநிலத்திற்க்கு நீர் தரமறுக்கும் கர்நாடகமும், கேரளமும் அயல்நாடு.... இங்கெல்லாம் பரவி பயணிக்கும் ஒரு பத்துரூபாய் தாள் ஒரு பரதேசியாய் என் மனக்கண்ணுக்கு தெரிகிறது.. அவ்வளவே..!!  தங்களுக்கும் அது அப்படித்தான் தெரிய வேண்டும் என்றில்லை.. வான் வீதியில் காற்றுக்குதிரையில் பயணிக்கும் ஒரே மேகம் எனக்கு பறவையாகவும் உமக்கு புரவியாகவும் தெரிந்தால் பிழை ஏதும் இல்லை.. :)
Title: Re: பத்து ரூபாய்..
Post by: ஆதி on April 02, 2013, 01:07:50 AM
தமிழ்நாட்டை உதாரணமாக நீங்கள் கை கொள்வீர்களென்று எதிர்ப்பார்த்தே இருந்தேன்

தமிழ்நாட்டின் பெயர்க் காரணம் தெளிய கொஞ்சம் வரலாறும் அறிந்திருக்க வேண்டியிருக்கிறது

தனி திராவிட நாடு கோரிக்கையை முன் மொழித்தே திமு கழகம் துவங்கப்பட்டது பிறகு அது கைவிடப்பட்டது

அதன் பிறகு அதனை ஈடுக்கட்டிக் கொள்ளவே மெட்ராஸ் மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர்ச்சூட்டப் பட்டது

என்று தமிழ்நாடு என்று பெயர்ப்பெற்றதோ அன்றிலிருந்தே தமிழகத்தை இந்தியாவில் சேராத தனி நாடாகத்தான் பிற மாநிலத்தவர்கர்கள் காண்கிறார்கள், வட மாநிலத்தில் என் நண்பர்கள் இதனை அடிக்கடி சொல்வார்கள்

கர்நாடகத்துக்கும் இது போல ஒரு கதையுண்டு, மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிரிந்த நாளை கர்நாடகா சுதந்திரதினமாக வருடந்தோறும் கொண்டாடி வருகிறது

அதாகப்பட்டது இவர்கள் அனைவரும் இந்தியாவில் இல்லாமல் தனித்த நாடாக இருக்க ஆசை கொள்கிறார்கள்

தேசம் என்பது நாட்டை குறிக்குமே அன்றி அது மாநிலத்தை குறிக்காது

மேகத்தின் ரூபமானது மாறிக் கொண்டே இருக்கும் அதற்கு நிலையான ரூபமில்லை

மொழி அப்படிப்பட்டதல்ல அதற்கு சொல் பொருள் அணி என இலக்கணம் உண்டு

வார்த்தைகளுக்கு அடிச்சொற்கள் உண்டு, அதற்கென தனிப்பொருளும் உண்டு

மொழி ஸ்திரமான அஸ்திவாரம் கொண்டது, மேகத்துக்கு ஸ்திரமுமில்லை அஸ்திவாரமுமில்லை

ஆக மேக உதாரணம் வார்த்தைக்கு பொருந்தாது

தேசம் என்பது ஒரு தனி நாட்டை குறிக்குமே அன்றி ஒரு மாநிலங்களை குறிக்காது

வேண்டுமானால் அகரமுதலியில் நிகண்டுகளில் இருந்து உதாரணம் எடுத்து வருகிறேன்

கலிங்க மெனும்பெயர் ஊர்க்குருவியும் புடைவையும்
வானம் பாடியும் கலிங்க தேசமுமாம்

-வடமலை நிகண்டு

-----------------

புத்தன் மெய்ஞானி இல்லையா எனும் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை ?
Title: Re: பத்து ரூபாய்..
Post by: sasikumarkpm on April 02, 2013, 08:56:16 AM
ஆதி அவர்களே தங்களின் சிரத்தை என்னை சிந்தை சிலிர்க்கச் செய்கிறது..
தெளிவாகவே கூறுகிறேன், அகநானுற்று பாடல் ஒன்றினை சாரமானது,
பாட்டுடைத்தலைவனை தலைவனை குறைத்துக்கூறும் தோழியிடம் தலைவி காதல் மயக்கம் கொண்டு பின்வறுமாறு கூறுகிறாள்,
என் தலைவனின் அழகும் வீரமும் என் கண்வழியாய் பார்க்கப்பெரும்போது அதன் சிறப்பே தனி என்று..
அது போலத்தான், பத்து ரூபாயும் பாரத தேசமும்.. என் கண்களுக்கும் உம் கண்களுக்கும் வெவ்வேறாய் தெரிகிறது..
உமக்கு அப்படி தெரிவதனால் எனக்கு என்நட்டமும் இல்லை.. எனக்கு  தெரிகின்ற அனைத்தும் உமக்கும் தெரிய வேண்டிய நிர்பந்த்தமுமில்லை..
நான் வெவ்வேறு மொழி, மாந்தரின் உடல்வாகு, வேறுபட்ட இயற்கை அமைப்பால் பிளவுபட்டு கிடக்கும் மாநிலங்களை தேசங்களாக உருவகப்படுத்தி பார்க்க எண்ணி இருந்தேன்..
மற்றும்,
புத்தன் மெய்ஞானி இல்லையா என நீங்கள் கேட்பது எனக்கு விளங்கவில்லை, இன்னும் சற்று என்நிலைக்கு இறங்கி வினவுங்களேன்..
Title: Re: பத்து ரூபாய்..
Post by: ஆதி on April 02, 2013, 12:41:38 PM
நீங்கள் சொல்லும் உதாரணம் இதற்கு பொருந்தாது சசிக்குமார்