FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on March 29, 2013, 02:38:24 PM

Title: ~ கண் பார்வை குறைவை தீர்க்கும் வெந்தயக்கீரை... ~
Post by: MysteRy on March 29, 2013, 02:38:24 PM
கண் பார்வை குறைவை தீர்க்கும் வெந்தயக்கீரை...

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-b.ak.fbcdn.net%2Fhphotos-ak-frc3%2F228928_124911131028230_1824003853_n.jpg&hash=bb903acc32fabd8111adfe1d99cc072a6c74a6fe)


வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.

வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு சட்டியுல் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டி, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும். வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும்,, பசியைப்போக்கவும் பயன்படுகிறது. வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது