FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: sasikumarkpm on March 29, 2013, 12:49:01 PM
-
உன்னை பெண்ணாக்கி,
என்னை ஆணாக்கி,
என்னை தன்னாலே,
உந்தன் பேயராலே,
காதல் வலைகோர்த்து,
கண்ணீர் கடல் சேர்த்து,
மின்னும் கயல் காட்டி,
மின்னல் வலி ஊட்டி,
இன்னல் பலயீந்து,
இன்னும் எனைத்துரத்தும்
வாழ்வியல் வலிகளுக்கு,
வாழ்ந்தோர் இட்ட பெயர்,
காதல்..
-
yelettu love pannaa ipdi thaan kavithai aruvi maari kottum...vaalnthor itta peyaraa?? pannurathulaam neenga pannitu ippadikku munnorgal ah..nallaa irukku sirpi silaiyai sedhukuvadhu pola unga sandham..eluthungal emmai pontror padithaavadhu kaathalai arindhu kolla
-
தீதும் நன்றும் பிறர் தர வராதாம் ... நீங்க எப்டி ?
காதலித்தவர்கள் காதல் வியாதிக்கான எதிர்வு கூறல்கள் என்று சொன்னவை எல்லாம் உங்கள் கவிதையில் தவழுதே .. ரொம்ப வலிக்குதா ?
-
angel.. வலிச்சுருந்த வழிய பாத்துகிட்டு போயிருக்க மாட்டோமா??? :D
என்னவளின் எண்ணங்கள் எனக்கினிய சுகம் தருகின்றன..
சில சமயம் கனிவாக, இன்னும் சில சமயம் கண்ணீராக..
-
சோ இனிசாதான் இருபிங்க வலிச்சா ஓடிடுவீங்க
-
உங்கள் கவிதை காதலில் தோற்றவர்கள் மாறி தெரிது அனால் நீங்கள் பேசுவது அப்படி தெரியவில்லையே.. இதில் எது உண்மை .?
-
global angel.. :) நான் தான் காதலில் வலியே இல்லைனு சொல்லுறேனே.. :) pinky... நல்ல கேக்குறாங்கயா detail'uu... :D
-
சசி அது என் பா.. எபவும் காதலில் தோற்ற தருணத்தை சுகமாக எழுதுறீங்க .. நான் இதற்கு ரசிகை ஆகிவிட்டேன் .. உண்மையாகவே நீங்கள் காதலில் தோற்று தன இருப்பீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது..
-
நன்றி pinky... எப்பொழுதுமே வெற்றி பெற்றுகிட்டே இருந்ததா தான் சுகம்னு இல்லை.. மனசுக்கு நெருக்கமானவங்களிடம் தோற்றுபோகுறதுல கூட ஒரு சுகம் இருப்பதாய் நான் உணருகிறேன். :)
-
வாழ்வியல் வலிகளுக்கு,
வாழ்ந்தோர் இட்ட பெயர்,
காதல்..
சசி நண்பா காதலில் வலி சுகம் தானே உங்கள் கவிதைகள் மிகவும் அருமை நண்பா மேலும் உங்கள் கவிதைகளை எழுதுங்கள்
-
நீங்க சொல்றதும் சரி தான் அந்த வழியை தாங்கி கொள்ள வேண்டுமே .?? அது உங்களை போல் சிலரால் மட்டும் தான் முடியும் .. எதையும் தாங்கி கொள்ளும் என்னால் கூட முடியாது..