FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on March 29, 2013, 11:38:27 AM

Title: என் எதிர்காலம்.....
Post by: Varun on March 29, 2013, 11:38:27 AM
உனக்கு என்னுடன் பேசுவதற்கு
விருப்பமில்லாமல் இருக்கலாம்
ஆனால் எனக்கு
உன்னைதவிர யாருடனும்
பேசுவதற்கு விருப்பமில்லை
என்ன செய்வது நான்
நீ மறந்தும் இருந்து விடுகிறாய்
என்னால் உன்னைப்போல்
மறந்து இருக்க முடியவில்லையே!
நான் உன்னை
மறக்க நினைத்து
இறந்து கொண்டிருக்கிறேன்
என் இதயதுடிப்பை கூட
நிருத்திவிடுவேன்
அதில் உன் நினைவுகளைதான்
என்னால் நிறுத்த முடியவில்லை
பிறகுதான் தெரிந்துகொண்டேன்
நீ என்னோடு இருந்து பிரிந்த
கடந்தகால நினைவுகளில்தான்
இப்போது என் நிகழ்காலம்
இருந்து கொண்டிருப்பதை
இருந்தும் என்னபயன்
உன் நினைவுகள் இருந்தும்
இறந்து கொண்டிருக்கிறது
என் எதிர்காலமும்
கடந்தகாலம் உன்னோடு
நிகழ்காலம் உன் நினைவுகளோடு
என் எதிர்காலம் யாரோடு...............................?
Title: Re: என் எதிர்காலம்.....
Post by: Global Angel on March 30, 2013, 01:49:07 AM
Quote
என் எதிர்காலம் யாரோடு...............................?


உன்னோடு உன்னோடுனு சொல்லிடு இதுக்கு மட்டும் யாரோடு என்று எதற்கு சந்தேகம் ? அப்போ ஒன்னு இல்லாட்டி இன்னொன்னு அப்டியா  ;D
Title: Re: என் எதிர்காலம்.....
Post by: Varun on March 30, 2013, 10:06:48 PM
hahaha angel vadivel mathiri sollanumna trisha illaina divya hehe
Title: Re: என் எதிர்காலம்.....
Post by: PiNkY on March 31, 2013, 10:51:56 AM
நான் உன்னை
மறக்க நினைத்து
இறந்து கொண்டிருக்கிறேன்
என் இதயதுடிப்பை கூட
நிருத்திவிடுவேன்
அதில் உன் நினைவுகளைதான்
என்னால் நிறுத்த முடியவில்லை

    வாவ்..! சூப்பர் லைன் வருண்.. இந்த வரிகள் என்னை மிகவும் ஈர்த்தது.. நீங்கள் கவிஞ்சரே தான் ., அதில் துளி கூட எனக்கு சந்தேகமே இல்லை.. வாழ்த்துக்கள் இது போல் இன்னும் நிறைய கவிதைகள் எழுத.. நண்பா..