FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on March 29, 2013, 04:00:12 AM
-
தெருவோரமாய்
ஒரு ஒற்றை காகிதம்
காற்றின் திசை எங்கும்
பறந்து கிழிந்து
ஓரங்கள் சிதைந்து
ஒழுக்குகளில் நனைந்து
இன்னும்
காற்றின் திசைக்கு ஈடு கொடுப்பதற்காய்
தன்னை தயார் செய்தவண்ணம் படபடக்கிறது ...
அது இறைவனுக்கு எழுதபட்ட
வேண்டுதல் கடிதமாய் இருக்கலாம்
தலைவனுக்கு தொண்டன் எழுதிய
தயை நிறைந்த கடிதமாய் இருக்கலாம்
மகனுக்கு தாய் எழுதிய
வயோதிப விண்ணப்பமாய் இருக்கலாம்
காதலனுக்கு கொடுபதட்காய்
பலகாலமாய் காத்துகிடந்த
காதல் மடலாக இருக்கலாம்
நிந்திக்கப்பட்டு
நிராகரிக்கபட்டு
வஞ்சிக்கப்பட்டு
கிழித்து எறியப்பட்ட ஒரு நகலாக இருக்கலாம்
இன்னும் அது வாழத் துடிக்கிறது
காற்று ஓய்ந்துவிடும் என்ற நம்பிக்கையில்
-
hi angel...unga ooviyam uyiraakiradhu kavithaikal palavatrukku naan adimai..anga reply poda idam illaiyaa adhaan inga poduren..nallaa nirayaa sindhanai kavithaikal eluthureenga ellaarum pola kaadhal,kaadhal nu eludhaama..way to go..ungal vaasakar varisaiyil naanum..vaalthukkal
-
ஒரு கணம் காகிதம் தான் உயிர் பெற்றுவிட்டதோ என என்ன தோன்றியது கடைசி வரியினை படிக்கும் போது... அடுத்த கவிதையினை படிக்க ஆவலுடன் காத்திருக்கும் நண்பன்..
-
அடடா இப்டி எனக்கு விசிறிகள் இருக்காங்கன்னு தெரியாமல் போய் விட்டதே ....
நன்றிகள் User , சசிகுமார் ....
நிச்சயமாய் தொடர்ந்து எழுதுவேன் ... மீண்டும் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள் ;)
-
Globalangel rommba naal appram kavithai poturukenga romba nala eruku ...nan ungal rasigan
-
thanks varun ... health problem ipo ok eni eluthuven ... ;)
-
ரொம்ப சிந்திக்க வைக்குற கவிதை angel .. நீங்கள் நல்லா யோசிகுறீங்க மா.. என்னகும் கொஞ்சம் கத்து தாங்களேன்
-
hahaha சிந்திக்குறது ஒன்னும் பெரிய விஷயமில்ல மோவாய் இருக்குள்ள அதுக்கு கைய கொடுத்து உக்காந்து மேல பாருங்க ...