FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: kanmani on March 26, 2013, 12:25:04 PM

Title: குளிர்பானங்களால் சுமார் 2,00,000 பேர் சாகின்றனர்
Post by: kanmani on March 26, 2013, 12:25:04 PM
சர்க்கரை பொருட்கள் கலந்த குளிர்பானங்களை அருந்துவதால், ஆண்டு தோறும், சுமார் 2 லட்சம் பேர் இறப்பதாக, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவின், நியூ ஆர்லியன்ஸ் நகரில், குளிர்பானங்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் குழுவில் உள்ள இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதாஞ்சலி சிங், இதுகுறித்து கூறுகையில்,

சர்க்கரை பொருட்கள் கலந்த குளிர்பானங்களை அருந்துவதால், எடை அதிகரிக்கிறது.

இதனால், சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. கடந்த, 2010ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, குளிர்பானம் அருந்தும் பழக்கம் உள்ளவர்களில், 1.3 லட்சம் பேர் சர்க்கரை நோயாலும், 44 ஆயிரம் பேர் இதய நோயாலும், 6,000 பேர் புற்றுநோயாலும் இறந்தது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் மட்டும், குளிர்பானங்களை அருந்திய, 25 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். உலகில், அதிக அளவில் குளிர்பானங்கள் அருந்துபவர்கள், மெக்சிகோ நாட்டினர். இந்த நாட்டில், 10 லட்சம் பேரில், 318 பேர், குளிர்பானங்களால் இறக்கின்றனர்.

குறைந்த அளவில் குளிர்பானம் அருந்தும் ஜப்பான் நாட்டு மக்களில், 10 லட்சம் பேரில், 10 பேர் மட்டுமே, இறப்பதாக இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.
Title: Re: குளிர்பானங்களால் சுமார் 2,00,000 பேர் சாகின்றனர்
Post by: User on March 29, 2013, 10:14:40 PM
nice info..research team la indian irukkadhu oru inam puriyaadha santhosam..vilamparam paathu kudikkanum thona thaan seiyudhu..ilaneer,fresh juice kudikiradhu kurainju poite varudhu.nalla payanulla thagaval..vaanga oru cup moru kudikkalaam naama..pakirvukku nantri..
Title: Re: குளிர்பானங்களால் சுமார் 2,00,000 பேர் சாகின்றனர்
Post by: kanmani on March 30, 2013, 09:17:51 AM
user அவர்களே .. உங்கள் பின்னுடதிற்கு  மிகவும் நன்றி ...

இன்று ப்ரெஷ் ஜூஸ் ன்னு நாம குடிக்கறது கூட .. பழங்கள் இயற்கையான முறையில்  கனிய வைக்கப்படுகிறதா ... எல்லாமே கலப்படம் செயற்கை ன்னு  வந்திடுச்சி  நமது அடுத்த தலைமுறையினரின் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என கருதுகையில் பயம் தான் மிஞ்சுகிறது.