FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Aswin on March 24, 2013, 11:24:03 AM

Title: ஆண் என்பவன் யார்?
Post by: Aswin on March 24, 2013, 11:24:03 AM
எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...

இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்....

ஆண் என்பவன் யார்?

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.

அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.

அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.

இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.

பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.

அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.

ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.

Title: Re: ஆண் என்பவன் யார்?
Post by: ஆதி on March 25, 2013, 05:10:25 PM
ஒரு ஆண் இழப்பதைக்காட்டிலும் ஒரு பெண் இ(ல்)வ்வாழ்வில் இழப்பது பற்பல‌

ஒரு ஆண் எவற்றை இழந்தாலும் தன் தாய்வீட்டை இழப்பதில்லை

ஒரு ஆண் கரு சுமப்பதில்லை, ஒரு ஆண் பிரசவ‌வலி கொள்வதில்லை, ஒரு ஆண் ஒவ்வொரு பிரசவத்தின் போதும் பார்வ்வையாளனாவ இருக்கிறான்

தன் இணை இறந்தப்பின் ஒரு ஆணுக்கு இந்த சமூகம் மறுமண உரிமம் வழங்கி வைத்திருக்கிறது, மனைவி உயிருடன் இருக்கும் போதும் இன்னொரு திருமணமும் அவனுக்கு சாத்தியமாகிறது (இன்னொரு திருமணம் சாத்தியமாகும் தருணத்தில் ஒரு பெண் தன் வாழ்க்கையையே விட்டுக் கொடுக்கிறாள்)

ஒரு ஆண் தன் இணையிடமும் தன் அகம்பாவத்தை விட்டுக் கொடுப்பதில்லை

ஒரு ஆண் தான் தெரிந்த‌ செய்த வன்கொடுமையையும் த‌ன் இணை எந்த‌ கேள்வியும்/விவாத‌மும் இல்லாம‌ல் ம‌ன்னிக்க‌ வேண்டும் என்று க‌ட்ட‌ளை இடுகிறான்

ஒரு ஆண் நான் எனும் செருக்குடனே கடைசி வரை வாழ்ந்து செத்து மடிகிறான்

ஒரு பெண் தன் அனைத்தையும் இழந்துவிட்டு, தான் ஒன்றையுமே செய்யவில்லை என்று இறுதிவரை சொல்வாள்

ஒரு ஆண் இதில் ஏதாவது ஒன்றை செய்துவிட்டாலும் இறுதிவரை அதனை சுட்டிக்காட்டிக் கொண்டே இருப்பான்
Title: Re: ஆண் என்பவன் யார்?
Post by: User on March 30, 2013, 09:40:58 PM
aswin nalla padhivu..pakirvu..'In seeking truth you have to get both sides of a story' apdinu solluvaangale..so aanukum oru ulagam irukku..kandippaa adhuvum sollanum..pengaluku idhu padikkum podhu avanga appa niyaabagam varum kandippaa konjam...aangal ulagam patriya arumaiyana  pakirvu..

aadhi avarkaluku oru anbaana vinnappam...neenga 'pen enbaval yaar' nu oru topic open panni 
karuthukkalai pathivu seidhaal nallaa irukkume innum..kuraigalai sutti kaattuvadhu nalladhu thaan..
aana niraigalai thatti kudukkavum seiyanum thaane..avanga potta posts pathi oru sila vaarthaigalai pathivu pannaa avangalukku melum pala posts podanum ennam varum thaane...

Euripides sonna words niyaabagam varudhu...."Silence is true wisdom's best reply"
 
Title: Re: ஆண் என்பவன் யார்?
Post by: sasikumarkpm on March 31, 2013, 12:57:21 PM
அஸ்வின்.. பதிவு அருமையாக இருந்தது.. :) ஆதி அவர்களே பெண்கள் இழக்காதவர்கள் என அஸ்வின் கூறியதாய் எனக்கு பிடிபடவில்லை.. அவரது பதிவு ஆண்களை பற்றி மட்டுமே.. 
Title: Re: ஆண் என்பவன் யார்?
Post by: ஆதி on April 01, 2013, 04:57:39 PM
user அவர்களே, இது அஷ்வினின் சொந்தப்பதிவாய் இருந்திருந்தால் பதிவைப் பற்றி மட்டுமே பேசியிருப்பேன்


இது ஒரு பகிர்வு, 2011ல் இருந்து பல இடங்களில் இணையத்தில் உலவும் பதிவு

இதனை அஷ்வின் பகிர்ந்து கொள்வதற்கு அவருக்கு இந்த பதிவு பிடித்திருக்க வேண்டும், ஆனால் அது சார்ப்பாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லாமல் பதிவை மட்டுமே பகிர்ந்து கொண்டு சென்றுவிட்டமையால், பதிவின் மீதெனக்கிருக்கும் எதிர்க்கருத்தை இங்கே பதிவிட்டு சென்றேன்
 
அப்புறம் user நீங்க என் பதிவை சரியா புரிந்து கொள்ளலை, நான் வைத்திருக்கும் விமர்சனம் ஆண்கள் மீதானது அது அஷ்வின் மீது இல்லை
புரிதலுக்கு நன்றி
Title: Re: ஆண் என்பவன் யார்?
Post by: ஆதி on April 01, 2013, 05:00:44 PM
சசிக்குமார், அஷ்வின் அப்படி சொன்னதாய் நானும் கூறவில்லையே
Title: Re: ஆண் என்பவன் யார்?
Post by: User on April 02, 2013, 04:09:22 PM
ஆதி பொறுமையாக விளக்கம் அளித்தமைக்கு நன்றி..உங்கள் வாசகத்தில் உள்ளது போல் நீங்களோ நிறை குடம் ,நீர் ததும்பும்..குறை குடம் நான்...கூத்தாடிவிட்டேன்... எனது நோக்கம் உங்கள் எதிர் கருத்துக்களே ஒரு பதிவு போல் இருந்ததால் தனியாக ஒரு பதிவாக இட்டு இருந்தால், மேலும் வசதியாக இருந்து இருக்குமே என்னைப்போன்றோர் பின்னூட்டம் இடுவதற்கு என்பதே..

பதிவு,பகிர்வு என பிரித்து நீங்கள் பின்னூட்டம் இடுவதை நான் அறியேன்..2011ல் இருந்து பல இடங்களில் இணையத்தில் உலவும் பதிவு...இணையத்தில் வெகுவாக வலம்வந்த இந்த பதிவினை எழுதியவர் யார் என நீங்கள் அறிவீர்களா? இயன்றால் பகிருங்களேன்..


"ஒரு ஆண் கரு சுமப்பதில்லை, ஒரு ஆண் பிரசவவலி கொள்வதில்லை, ஒரு ஆண் ஒவ்வொரு பிரசவத்தின் போதும் பார்வ்வையாளனாவ இருக்கிறான்"   இந்த வரிகள் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது...இயற்கையின் விதியை கூடவா பழிக்கிறீர்கள் இந்த பதிவுக்கு உங்கள் எதிர்கருத்து கூற??

ஆண்கள் மீதானது அஸ்வின் மீதானது அல்ல???
(அஸ்வின் பெயர் வைத்து அவர் ஆண்பாலினம் என தவறாக புரிந்து கொண்டேன்..மன்னிக்கவும்...) நன்றி உங்கள் பயனுள்ள பின்னூட்டத்திற்கு...
Title: Re: ஆண் என்பவன் யார்?
Post by: ஆதி on April 02, 2013, 08:32:09 PM

"ஒரு ஆண் கரு சுமப்பதில்லை, ஒரு ஆண் பிரசவவலி கொள்வதில்லை, ஒரு ஆண் ஒவ்வொரு பிரசவத்தின் போதும் பார்வ்வையாளனாவ இருக்கிறான்"   இந்த வரிகள் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது...இயற்கையின் விதியை கூடவா பழிக்கிறீர்கள் இந்த பதிவுக்கு உங்கள் எதிர்கருத்து கூற??


உங்கள் ஆட்சர்யம் எனக்கு பெரிய‌ ஆட்சர்யத்தை தருகிறது தோழரே

நீங்கள் குறிப்பிட்டிருப்பது இயற்கையின் நியதி என்றால் தாய்மைக்கு தெய்வத்தன்மை எதற்கு ?

தாய்நாடு என்ற கூற்று வஞ்சனைத் தன்மையோடுள்ளதல்லவா ? தகப்பன் தான் என்ன தவறு செய்தானோ ?

இறத்தலுக்கு அழுதல் எதற்கு ?

கண்ணீர் எதற்கு ? கதறல்கள் எதற்கு ? யாவும் நியதிக்கு எதிர்மையன்றோ ?


======================================================

பாராட்டு படைத்தவனுக்கு போக வேண்டும் என்பதின் அதிக்கப்படியான கவனமே, பகிர்வையும் படைப்பையும் பிரித்து பார்க்கும் பழக்கத்தை உண்டாக்கியது தோழரே


புரிதலுக்கு நன்றி